நம்ம போலீஸ், நம்பகமான போலீஸ் காவல் துறைக்கு நன்றி சொன்ன விஷால்
அண்மையில் வடகிழக்கு பருவமழை வெளுத்துவாங்கியபோது, சென்னையிலும் மற்ற பகுதிகளிலும் பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளக்காடாகின. அணைகள் பலவற்றில் நீர் இருப்பு அதிகரித்திருந்தது. பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ஆனால், என்ன நடந்தாலும், மழை எவ்வளவு தீவிரமாக பெய்தாலும் சில தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி பணி செய்துகொண்டிருந்தனர். துயரத்தில் இருந்த பொதுமக்களுக்கு உதவிக் கொண்டிருந்தனர்.
"நன்மையைப் பாராட்டுவதிலேயே அனைத்து நன்மையும் அடங்கியிருக்கிறது" இது திபெத் மதகுரு தலாய் லாமாவின் வாக்கு.
கனமழையின்போது களத்தில் பணியாற்றிய காவல்துறையினரை பாராட்டியேதீர வேண்டும். மழையால் தேங்கிய தண்ணீர் பல பகுதிகளிலும் வடிந்துவிட்டது. ஆனால், மழைநீர் சூழ்ந்துகிடந்த அந்த நாட்களில் காவல்துறையினர் களத்தில் ஆற்றிய பணி மற்ற அரசு துறைகளுக்கு முன்மாதிரியாக ...
