வெளவல்ஸ்’ – திரைவிமர்சனம் Rank 2/5
‘வெளவல்ஸ்’ (Vowels) – திரைவிமர்சனம் (
நடிப்பு : யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் அய்யப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நந்து, தீபக் பரமேஷ், காஜல் சௌத்ரி, பீட்டர் கே, ஷரத் ரவி, அக்ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வாஷிதா
இயக்கம் : திலீப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன்
இசை : சரவண சுப்பிரமணியம்
தயாரிப்பு : ரித்து சித்து ஃபிலிம்ஸ் – ராஜு ஷெரேகர்
சினிமாவில் புதுமையான முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால் அந்த முயற்சி பார்வையாளர்களை ஈர்க்காமல், குழப்பத்தையும் சலிப்பையும் மட்டுமே கொடுத்தால் அது முயற்சியாக மட்டுமே மிச்சமிருக்கும். அப்படியான ஒரு முயற்சியாகவே ‘வெளவல்ஸ்’ (Vowels) படம் முடிவில் தோன்றுகிறது.
ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ள ஐந்து குறும்படங்களை ஒன்றாக இணைத்து முழுநீளத் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஐந்து கதைகளுக்கும் உள...
