வாரண்ட் – வெப் சீரிஸ் விமர்சனம் ( Rank 4/5)
“சாது மிரண்டால் காடு கொள்ளாது” — அந்த பழமொழிக்கே உயிரூட்டும் வகையில் உருவாகியுள்ள அதிரடி வெப் சீரிஸ் தான் வாரண்ட்.
தமிழ் OTT உலகில் பல்வேறு வெப் சீரிஸ்கள் வந்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து, தரமான போலீஸ் டிராமாவாக பெரும் பாராட்டைப் பெற்றது விலங்கு. அந்த வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் மீண்டும் ஒரு முறை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் முயற்சியாக வாரண்ட் வெப் சீரிஸை உருவாக்கியுள்ளார். இந்த முறை அவர் இயக்குநராக இல்லாமல் கதாநாயகனாக புதிய பரிமாணத்தில் தன்னை நிரூபித்திருக்கிறார்.
முதல்முறையாக நடிகராக அவதாரம் எடுத்துள்ள பிரசாந்த் பாண்டியராஜ், மிகவும் இயல்பான மற்றும் நம்பகமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு போலீஸ் அதிகாரியின் உள்ளார்ந்த மன அழுத்தம், வேலையின் மீது படிப்படியாக குறையும் ஈடுபாடு, அதனால் உருவாகும் சிக்கல்கள் ஆகியவற்றை அவர் மிக நேர்த்தி...
