மூன்று நண்பர்களின் கனவுக்கு தயாரானது புதிய கூட்டணி! – ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம்
மூன்று நண்பர்களின் கனவுக்கு தயாரானது புதிய கூட்டணி! – ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம்
‘கணம்’ பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், தேவ் ராம்நாத், விநாயக் வைத்தியநாதன் இணைந்த முயற்சிக்கு முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் ஆதரவு!
ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு, அதை நனவாக்குவதற்கான தொடர் முயற்சிகள், எதிர்கொண்ட சவால்கள் என மூன்று நண்பர்களின் திரைப்பயணம் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ‘கணம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், நடிகரும் தயாரிப்பாளருமான தேவ் ராம்நாத், ‘ரோமியோ’ பட இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து முன்னெடுத்துள்ள புதிய திரைப்பட முயற்சிக்கு தற்போது வலுவான தயாரிப்புக் கூட்டணி அமைந்துள்ளது.
ஒரு திரைப்படத்தைத் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் முதல், பொருத்தமான கதையைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட சவால்கள், நிராகர...
