
- மூன்று நண்பர்களின் கனவுக்கு தயாரானது புதிய கூட்டணி! – ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம்
‘கணம்’ பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், தேவ் ராம்நாத், விநாயக் வைத்தியநாதன் இணைந்த முயற்சிக்கு முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் ஆதரவு!
ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு, அதை நனவாக்குவதற்கான தொடர் முயற்சிகள், எதிர்கொண்ட சவால்கள் என மூன்று நண்பர்களின் திரைப்பயணம் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ‘கணம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், நடிகரும் தயாரிப்பாளருமான தேவ் ராம்நாத், ‘ரோமியோ’ பட இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து முன்னெடுத்துள்ள புதிய திரைப்பட முயற்சிக்கு தற்போது வலுவான தயாரிப்புக் கூட்டணி அமைந்துள்ளது.
ஒரு திரைப்படத்தைத் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் முதல், பொருத்தமான கதையைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட சவால்கள், நிராகரிப்புகள் எனத் தங்களது பயணத்தில் எதிர்கொண்ட அனுபவங்களை இந்த மூவரும் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வடிவில் பகிர்ந்து வந்தனர். தாங்கள் நம்பிய கதையைத் தேர்ந்தெடுத்து, அதைத் திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்ற உறுதியுடன் தொடர்ந்து செயல்பட்டு வந்த இவர்களின் முயற்சி தற்போது முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தப் புதிய திரைப்படத்தை ஸ்ரீ கார்த்திக் இயக்குகிறார். ‘மேட்பாய்ஸ் என்டர்டெயின்மெண்ட்’ (Madboys Entertainment) நிறுவனத்துடன் இணைந்து ‘சிறுனி சினி கார்ப்பரேஷன்’ (Siruni Cine Corporation) இப்படத்தைத் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமலா அக்கினேனி, சர்வானந்த், ரிது வர்மா நடிப்பில் வெளியான ‘கணம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீ கார்த்திக். அறிவியல் புனைகதையையும் குடும்ப உணர்வுகளையும் இணைத்துச் சொன்ன அந்தப் படம், அவரது தனித்துவமான கதை சொல்லும் பாணியை வெளிப்படுத்தியது. தற்போது தனது அடுத்த படைப்பை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ள அவர், தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்தியநாதன் ஆகியோருடன் இணைந்து இந்தப் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
தேவ் ராம்நாத் மற்றும் ஸ்ரீ கார்த்திக் தலைமையில் செயல்பட்டு வரும் ‘மேட்பாய்ஸ் என்டர்டெயின்மெண்ட்’, ‘I Hate You I Love You’, ‘Childhood Diaries’ உள்ளிட்ட இணையத் தொடர்கள் மற்றும் குறும்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. தற்போது இந்தப் புதிய திரைப்படத்தின் மூலம் தயாரிப்புத் துறையிலும் தனது பயணத்தைத் தொடங்குகிறது.
தேசிய விருது பெற்ற ‘சி ல சௌ’ (Chi La Sow) திரைப்படத்தைத் தயாரித்த ‘சிறுனி சினி கார்ப்பரேஷன்’, இப்படத்தில் இணைந்து தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இதன் மூலம் மூன்று நண்பர்களின் தனிப்பட்ட முயற்சியாகத் தொடங்கிய திரைப்படக் கனவு, தற்போது அனுபவம் வாய்ந்த தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டணியுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தின் தலைப்பு, நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.
கனவைத் திட்டமாக மாற்றி, திட்டத்தைத் திரைப்படமாக உருவாக்கும் நோக்கில் ஒன்றிணைந்துள்ள மூன்று நண்பர்களின் இந்தப் புதிய முயற்சி, தமிழ் மற்றும் தென்னிந்தியத் திரையுலகில் அடுத்ததாக வெளியாகவுள்ள சுவாரஸ்யமான திரைப்பட அறிவிப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
Three Friends, One Film, One Journey: Sri Karthick’s Next Film Takes a Major Step Forward
Director Sri Karthick, actor-producer Dev Ramnath and ‘Romeo’ director Vinayak Vaidyanathan join hands for a new film backed by Siruni Cine Corporation!
A dream shared by three friends to make a film is now moving closer to reality. Director Sri Karthick, who made his directorial debut with Kanam, actor and producer Dev Ramnath, and Romeo director Vinayak Vaidyanathan have joined hands for a new cinematic venture that has now reached a significant milestone with the backing of an established production house.
Over the past few months, the trio has been documenting their filmmaking journey through social media reels. From the challenges of getting a film off the ground and the difficulties of finding the right story to facing rejections and persevering with a script they believed in, they have shared glimpses of their journey with audiences. Their continued efforts have now led to an important breakthrough, with a production partnership coming on board to take the project forward on a larger scale.
The yet-to-be-titled film will be directed by Sri Karthick and produced by Siruni Cine Corporation in association with Madboys Entertainment. The collaboration has been officially announced.
Sri Karthick made his directorial debut with Kanam, starring Amala Akkineni, Sharwanand and Ritu Varma. The film brought together science fiction and heartfelt family emotions, establishing his distinctive approach to storytelling. For his upcoming project, he joins forces with Dev Ramnath and Vinayak Vaidyanathan in a collaborative creative venture.
Madboys Entertainment, led by Dev Ramnath and Sri Karthick, has earned recognition among audiences through popular web series and short films, including I Hate You I Love You and Childhood Diaries. With this upcoming film, the company is stepping into film production for the first time.
Joining the project as a co-producing partner, Siruni Cine Corporation previously produced the National Award-winning film Chi La Sow. The collaboration marks a significant development for the trio, whose filmmaking dream began as an independent effort and has now gained the support of an established production banner.
Details regarding the film’s title, cast and technical crew are expected to be officially announced soon.
What began as a shared dream among three friends is now taking shape as a full-fledged cinematic venture. With a new production partnership in place, Sri Karthick and his collaborators are preparing to take the next step in their filmmaking journey, raising anticipation for further updates about the project.

