ஆக்சஸ் பிலிம் பேக்டரி’ தயாரிக்கும் படத்தில் இணையும் விஷ்ணு விஷால் முண்டாசுப்பட்டி’ ராம்
'முண்டாசுப்பட்டி' திரைப்படத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களின் அமோக பாராட்டுகளையும் பெற்றவர் நடிகர் - தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்...இதுவரை எவரும் கண்டிராத கதை களத்தை 'முண்டாசுப்பட்டி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வழங்கிய பெருமை இயக்குனர் ராமிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் அதிகளவில் பெற்ற இந்த இருவர் வெற்றி கூட்டணி, தற்போது 'ஆக்சஸ் பிலிம் பேக்டரி' சார்பில் தயாரிப்பாளர் டில்லி பாபு தயாரிக்கும் பெயரிடப்படாத அதிரடி படத்திற்காக இணைந்திருக்கிறது. திரையுலகின் வர்த்தக களத்தில் தரமான திரைப்படங்களை கொண்டு கால் பதித்து வருகிறது 'ஆக்சஸ் பிலிம் பேக்டரி' என்பதை இந்த படம் மூலம் உறுதியாக சொல்லலாம்.
"எப்போதுமே எனக்கும், விஷ்ணு விஷாலுக்கும் இடையே நல்லதொரு நட்புறவு நீடித்து வருகிறது. தன்னுடை...
