கடாரம் கொண்டான் – திரை விமர்சனம் (மிரட்டல்) Rank 4/5
நடிகர் விக்ரம் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்
குற்றவாளி ஒரவர் காயம் பட்டு ஹாஸ்பிடல் வருகிறான். அங்கு வேலை பார்க்கும் டாக்டரின் மனைவியை கடத்தி அந்த குற்றவாளியை வெளியே அழைத்து வரச் சொல்கிறார்கள். ஒரு பக்கம் அந்த குற்றவாளியை கொல்ல ஒரு கும்பல் சுத்துகிறது. இன்னொரு பக்கம் காவல் துறை துரத்துகிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது. அந்த டாக்டரின் மனைவி காப்பாற்றப்பட்டாரா? அந்த குற்றவாளியும், டாக்டரும் தப்பித்தார்களா? என்பது தான் கதை.
2010ல் வெளிவந்த ஸ்பானிஷ் திரைப்படம் Point blank. இப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுதயாரிப்புகாக வந்திருக்கிறது கடாரம் கொண்டான். கதை, திரைக்கதையில் எந்த பெரிய மாற்றங்களும் இல்லை. அதுவே பெரும் ஆறுதல். Point blank சீட் எட்ஜ் திரில்லர் வகையை சார்ந்தது. அதே போல் தமிழிலும் படத்தின் முதல் காட்சியிலேயே பரபரப்...


