சவாலான தருணங்களிலும் புன்னகைக்கும் மனோபாவம் படைத்தவர் சிவகார்த்திகேயன்!!
பண்டிகை காலங்கள் நெருங்கி வந்து கொண்டிருக்க, புதுரக ஆடைகளும், அலங்கார அணிகலன்களும் கடை வீதியில் குவிந்த வண்ணம் இருக்கின்றது. அவற்றுள் அதிகமாக இளைஞர்களால் தேடப்படுவது, ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் அணிந்திருக்கும் மாடர்ன் ஆடைகள் தான். ஆண்கள் மட்டுமின்றி இளம் பெண்களும் 'ரெமோ' படத்தில் சிவகார்த்திகேயன் அணிந்திருக்கும் 'மார்லின் மன்ரோ' ஸ்கர்ட்டை தேடி கொண்டிருக்கின்றனர் என்பதை உறுதியாகவே சொல்லலாம். பார்த்தவுடன் கண்களை கவரும் இத்தகைய அற்புதமான ஆடைகளை வடிவமைத்தவர், 'ரெமோ' படத்தின் ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றும் வலிமை ஆடை வடிவமைப்பாளருக்கு இருக்கின்றது. "இயக்குனரின் சிந்தனையை புரிந்து கொண்டும். கதாபாத்திரத்தை நினைவில் வைத்து கொண்டும் ஆடைகள் வடிவமைப்பதே ஒரு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கு அழகு. எங்களின் 'ரெமோ' திரைப்படம் ...
