Monday, August 10
Shadow

Tag: தளங்களிலிருந்து

சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருக்க போவதாக த்ரிஷா அறிவிப்பு

Latest News, Top Highlights
தமிழ் திரையுலகில் நிலைத்து நிற்கும் கதாநாயகிகளில் ஒருவர் த்ரிஷா. தென் திரையுலகின் ராணி என்றழைக்கப்படும் த்ரிஷா திரைதுறையில் 20 ஆண்டுகளை கடந்துவிட்டார். இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது தன்னுடைய மனதிற்கு மறதி தேவை என்றும், தான் டிஜிட்டல் தளங்களில் இருந்து விலகியிருக்க விரும்புவதாகவும், குறிப்பாக சமூக வலைதளங்களிலிருந்து சில காலம் விலகி இருக்க போவதாகவும் அறிவித்துள்ளார். இதனை த்ரிஷா "டிஜிட்டல் டீடாக்ஸ்" என்று குறிப்பிடுகிறார்.அதாவது டிஜிட்டல் தளங்களின் போதை நீக்கம் என்று கூறியுள்ளார். மேலும் த்ரிஷா தனது ட்வீட்டில் தனது ரசிகர்களை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும், இதுவும் கடந்து போகும் என்றும் கூறியுள்ளார். திடீரென த்ரிஷா சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருக்கபோவதாக வெளியிட்ட அறிக்கையினால் த்ரிஷாவின் ரசிகர...