சியான் விக்ரமின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகை
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர், தற்போது இமைக்கா நொடிகள் பட புகழ் அஜய் ஞானமுத்து இயகத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க உள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ், வைகாம் 18 மோஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரிகிறது. ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை வரும் 2020ம் ஆண்டு கோடை காலத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்....

