விஸ்வாசம் படத்துக்கு பிறகு அஜித் நடிக்கும் படம் பிங்க் ரீமேக் என்பது நாம் அறிந்த விஷயம் இந்த படதில் மற்ற நடிகர்கள் பட்டியல் ஒன்று ஒன்றாக இன்று கசிந்து வருகிறது இந்த படத்தில் மூன்று நாயகிகள் அதில் ஒருவர் மட்டும் தேர்வாகியுள்ளார் என்று கசிந்துள்ளது
‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தல 59’ என்று குறிப்பிடப்படுகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில், மூன்று நாயகிகளில் ஒருவராக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் மகள்தான் இந்தக் கல்யாணி. மற்ற நடிகர் – நடிகைகள் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை.
ஹலோ’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கல்யாணி, தற்போது மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், துல்கர் சல்மான் ஜோடியாக ‘வான்’ என்ற தமிழ்ப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கல்யாணி ப்ரியதர்ஷன்.விரைவில் மற்ற இரண்டு நாயகிகள் யார் என்றும் விரைவில் தெரியவரும். அதோடு முக்கிய காதபாதிரத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் தந்தி டிவி ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார்கள். #ajith #athikravichandran #ak59 #vinoth #rangarajpandey, #kalyanipriyadharshan #thala59