தளபதி நடிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் படம் தளபதி இந்த படத்தின் படப்பிடிப்பு எவ்வளவு வேகமாக வளர்கிறதோ அந்த அளவுக்கு ரகுமான் பாடல்கள் ஒரு பக்கம் தயார் செய்து வருகிறார் அதுவும் ரசிகர்களுக்கு ரசனைக்கு ஏற்ப பாடல் மிகவும் தர லோக்கலாக உருவாக்கி வருகிறார்.

விஜய் நடித்த மெர்சல், சர்கார் படங்களுக்குப்பிறகு தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 63வது படத்திற்கும் இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும், மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப் போறான் தமிழன் பெரிய அளவில் ரீச் ஆனது. அதனால் விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், விஜய் 63 படத்தில், விஜய் வடசென்னை நபராக நடிக்கிறார். அதனால் அவரின் ஓப்பனிங் பாடல் செம மாஸாக இருக்க வேண்டும் என்பதற்காக இசையை, தர லோக்கலாக இறங்கி அடித்திருக்கிறாராம் ரஹ்மான். அந்தபாடல் தற்போது சென்னையிலுள்ள பின்னி மில்லில் படமாக்கப்பட்டு வருகிறது.

Related