தமிழ் சினிமாவில் விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை தொடரும் கதை பிரச்சனை இதுவரை அட்லீ பண்ண படத்தின் கதைகள் வேறு படத்தில் இருந்து சூட்டப்பட்டது என்று வரும் அது தற்போது நடித்து வரும் தளபதி 63க்கும் வந்துள்ளது. இந்த முறை கதை திருட்டு குறும் படத்தில் இருந்தாம்

 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் ரஜினி நடித்த ஒரு பழைய படத்தின் கதை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. அதேபோல் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்த கத்தி படமும் கதை சர்ச்சையில் சிக்கியது. அதையடுத்து ஏ.ஆர். முருக தாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படமும் கதை சர்ச்சையில் சிக்கியது.

 

நீதிமன்றம், தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்படியான நிலையில், மெர்சலைத் தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கும் தனது 63வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இந்த படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாகக்கொண்ட கதையில் உருவாகி வருகிறது.
இந்தநிலையில், சிவா என்றொரு குறும் பட இயக்குனர் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி தான் எடுத்த குறும் படத்தை மையமாக வைத்து விஜய் 63வது படத்திற்கான கதையை இயக்குனர் அட்லி ரெடி பண்ணியிருப்பதாக புகார் கூறி வருகிறார். அதோடு இந்த கதை திருட்டு விவகாரத்தை தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் நீதிமன்றத்துக்கும் அவர் கொண்டு சென்றிருப்பதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகியிருக்கிறது

Related