சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் மிவவும் பெரிய ஒரு எதிர்ப்பார்ப்பில் உள்ளது காரணம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் என்பதே அதிலும் இந்த கதை முழுக்க முழுக்க போலிஸ் கதை ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின் போலீஸ் கதாபாத்திரத்தில் களம் இறங்குகிறார் .

பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 167வது படமான தர்பாரை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். மும்பையில் நடைபெற்று வரும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இவர் ரஜினிக்கு ஜோடி என்று சொல்லப்பட்டாலும், நயன்தாரா ஒரு நெகடீவ் ரோலில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேபோல், இந்த தர்பார் படத்தில் படம் முழுக்க ரஜினி ஐபிஎஸ் அதிகாரியாகவே நடிக்கிறார். இடையில் வரும் ஒரு பிளாஷ்பேக்கில் சமூக சேவகராக நடிக்கிறார் ரஜினி. இந்த ரோலில் வரும் ரஜினி அப்பா ரஜினியாக இருக்கும் என்று தெரிகிறது. காரணம், சற்று வயதான கெட்டப்பில் அந்த ரஜினியை காண்பிக்க முடிவு செய்துள்ளாராம் முருகதாஸ். அந்த கெட்டப் புக்கான காஸ்டியூம்கள் சென்னையில் ரெடி செய்யப் பட்டு சில தினங்களுக்கு முன்பு மும்பை கொண்டு சென்றுள்ளார்கள்.

Related