Friday, November 14
Shadow

தளபதி 64 படபிடிப்பில் தீடீர் சிக்கல்

 

கடந்த தீபாவளிக்கு வெளியாகி வெற்றிநடை போடும் படம் பிகில் இந்த படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது இதுவரை இந்த படம் 250கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது .

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது டில்லியில் நடக்கிறது.

தற்போது டில்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. ஆகவே ஏற்கனவே திட்டமிட்ட 40 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடிப்பது சிரமம் என்கிறார்கள். எனவே படப்பிடிப்பு டில்லியில் மேலும் சில வாரங்கள் தொடரும் என்கிறார்கள்.