பொதுவாக நேர்காணல் என்றாலே நம் அனைவருக்கும் ஒரு விதமான பயம் இருக்கும், ஆனால் விரைவில் வெளியாகும் ‘தாயம்’ படத்தில் நடைபெற இருக்கும் நேர்காணலானது, அந்த பயத்தையும் ஒரு படி மேலே எடுத்து செல்ல இருக்கிறது. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி விஜய் சேதுபதி வெளியிட்ட ‘தாயம்’ படத்தின் டீசரே அதற்கு ஒரு சிறந்த உதாரணம். ‘பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்’ சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தாயம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார், குறும்படங்களை இயக்குவதில் கலை நயம் படைத்த அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியான இந்த தாயம் படத்தின் டீசரானது தற்போது யூடூப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை எட்டியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரே அறையில் படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘தாயம்’ என்று சொன்னால் அது மிகையாகாது.
“வெல்கம் டு தி இன்டெர்வியூ….” என்ற வசனத்தோடு ஆரம்பமாகவும் ‘தாயம்’ படத்தின் 40 வினாடிகள் ஓடக்கூடிய டீசரானது, பார்வையாளர்களுக்கு ஒரு திகில் அனுபவத்தை தருகிறது என்பதை உறுதியாக சொல்லலாம். சிறந்த திரில்லர் திரைப்படமாக உருவெடுத்து வரும் ‘தாயம்’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.