
“கேன்ஸில் கைதட்டல் வாங்கிய ‘தாழ் திறவா’… தமிழ் சினிமாவுக்கு புதிய ஹாரர் முகம்!”
தமிழ் சினிமாவில் ஹாரர் படங்கள் பல வந்திருக்கலாம். ஆனால், பழமையான அகழ்வாராய்ச்சி மர்மங்களையும் அமானுஷ்ய திகிலையும் ஒன்றாக இணைத்து, சர்வதேச அளவிலேயே கவனம் ஈர்க்கும் வகையில் உருவாகி வரும் படம் தான் “தாழ் திறவா”. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளன.
சாதாரண ஹாரர் கதையல்ல… ஒரு கிராமத்தில் கண்டுபிடிக்கப்படும் மர்ம எழுத்துக்கள், அதன் பின்னால் மறைந்து கிடக்கும் இருண்ட ரகசியங்கள், மனிதர்களை அச்சத்தில் ஆழ்த்தும் அமானுஷ்ய சக்திகள் – இவையெல்லாம் சேர்ந்து உருவாகும் புதுமையான திரில்லர் அனுபவமாக “தாழ் திறவா” அமைகிறது.
இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இதன் டீசர் திரையிடப்பட்டிருப்பது. மே 19ஆம் தேதி இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்ட டீசர், சர்வதேச ரசிகர்களிடமிருந்து கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவிலிருந்து வரும் ஒரு ஹாரர் திரைப்படம் உலக அரங்கில் பேசப்படுவது, திரையுலக ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் அதே அளவுக்கு திகிலை கிளப்புகின்றன. முதல் போஸ்டரில், இருள் சூழ்ந்த இடத்தில் மர்ம கைகள் வாணி போஜனை இழுத்துச் செல்ல முயலும் காட்சி பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அவரை காப்பாற்ற ஆதவ் கண்ணதாசன் ஓடி வரும் தருணம், கதையின் அவசரத்தையும் மர்மத்தையும் உணர்த்துகிறது.
மற்றொரு போஸ்டரில், பழமையான மாளிகை, பயத்தில் உறைந்த குழந்தைகள், திறக்கப்பட காத்திருக்கும் ரகசிய கதவு, அமானுஷ்ய சக்திகளின் இருப்பை உணர்த்தும் காட்சிகள் என முழுக்க முழுக்க ஹாரர் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களே படம் எந்த அளவுக்கு திகில் அனுபவத்தை தரப்போகிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றன.
பரணி சேகரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரின் கதாபாத்திரங்களும் படத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
Barman Pictures தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஹாரர் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், மர்மமும் சஸ்பென்ஸும் கலந்த வித்தியாசமான கதைகளை விரும்பும் அனைவருக்கும் “தாழ் திறவா” ஒரு புதிய அனுபவமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

“‘Thazh Thiravaa’ Wins Attention at Cannes… A New Face of Tamil Horror Cinema!”
Tamil cinema has produced many horror films over the years, but “Thazh Thiravaa” stands apart by blending archaeological mystery with supernatural horror in a way that has already caught international attention. The recently released first-look posters of the film have now sparked strong curiosity among audiences.
This is not just another routine horror story. The film revolves around mysterious ancient inscriptions discovered in a village, the dark secrets hidden behind them, and terrifying supernatural forces that begin to haunt those who uncover the truth. With this unique premise, “Thazh Thiravaa” promises a fresh thriller experience for horror lovers.
One of the film’s biggest achievements is its presence at the globally celebrated Cannes Film Festival. The teaser of the film was screened at the Indian Pavilion on May 19 and reportedly received appreciation and attention from international viewers. A Tamil horror film gaining recognition on such a prestigious global platform is being seen as a proud moment for Tamil cinema.
The newly unveiled first-look posters further amplify the eerie atmosphere of the film. In the first poster, mysterious hands emerging from darkness attempt to drag away actress Vani Bhojan, while Aadhav Kannadasan rushes toward her in panic, creating a sense of urgency and fear.
The second poster presents an old mansion, frightened children, a secret door waiting to be opened, and visuals hinting at supernatural forces. The haunting expressions and tense atmosphere suggest that the film is set to offer a truly intense horror experience.
Directed by Barani Sekaran, the film stars Aadhav Kannadasan and Vani Bhojan in lead roles. The cast also includes Suresh Menon, Subbu Panchu, and Shyam Prasad in pivotal roles. Child artists Lisha and Lalith are also said to play important characters in the story.
Produced by Barman Pictures, the film has completed shooting and is currently in its final stages of post-production. The makers have announced that the official teaser and music release will be unveiled soon.
With its mix of horror, suspense, mystery, and supernatural elements, “Thazh Thiravaa” is already building strong expectations among audiences who are looking for a different and immersive cinematic experience.
