Wednesday, August 12
Shadow

மெதுவாக கொல்லும் நஞ்சுக்கு எதிரான போராட்டம்!” – ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் எழுப்பும் கேள்விகள்

“மெதுவாக கொல்லும் நஞ்சுக்கு எதிரான போராட்டம்!” – ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் எழுப்பும் கேள்விகள்

நச்சு பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு மனிதர்களின் உடல்நலத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம், தனது புதிய போஸ்டரின் மூலம் ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Zee Studios மற்றும் MIG Production இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் சேட்டன் DK இயக்கியுள்ளார். கதையை எழுதி தயாரித்திருப்பவர் சாகர் B. ஷிண்டே. இந்த படம் வரும் ஜூலை 24, 2026 அன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வெளியாகியுள்ள புதிய போஸ்டரில், காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இருவரும் மக்கள் கோபத்தின் மத்தியில் சிக்கித் தவிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. காய்கறி சந்தையை பின்னணியாகக் கொண்ட இந்த காட்சியில், பொதுமக்கள் இருவரையும் நோக்கி காய்கறிகளை வீசி எதிர்ப்பை வெளிப்படுத்துவது, உண்மையை வெளிக்கொணர முயல்பவர்களுக்கு சமூகத்தில் உருவாகும் எதிர்ப்பை குறியீடாக வெளிப்படுத்துகிறது.

போஸ்டரில் இடம்பெற்றுள்ள “Slow Poison in Progress…” என்ற வாசகம், நாம் தினமும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களுக்குள் மறைந்திருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டுவதோடு, படத்தின் மையக் கருத்தையும் வலுவாக எடுத்துரைக்கிறது.

படம் குறித்து இயக்குநர் சேட்டன் DK கூறுகையில், “உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சிப்பவர்கள் சந்திக்கும் எதிர்ப்பையும், ஏமாற்றத்தின் மீது கட்டமைக்கப்பட்ட அமைப்பை கேள்வி கேட்கும் போது உருவாகும் பயமும் கோபமும் இந்த போஸ்டரில் பிரதிபலிக்கின்றன. இந்த திரைப்படம் வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், நாம் சாப்பிடும் உணவு மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து பார்வையாளர்கள் சிந்திக்க வைக்கும் முயற்சியாக இருக்கும்,” என்றார்.

இந்த படத்தின் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி விநாயக் சைந்தானி, அனிதா ஜாதவ், விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவை நிஷாந்த் பகவத், இசையை மங்கேஷ் தாக்டே, படத்தொகுப்பை ஆஷிஷ் மாத்ரே, பாடல்களை ஷகீல் அஜாமி, ஒலி வடிவமைப்பை அன்மோல் பாவே கவனித்துள்ளனர்.

சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தக்கூடிய கருவை நீதிமன்ற பின்னணியுடன் திரைக்கதையாக்கியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’, ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் சிந்தனையைத் தூண்டும் படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

‘The India Story’ Unveils Another Striking Poster Highlighting the Hidden Dangers of Toxic Farming

The makers of The India Story have released a powerful new poster, further building anticipation for the socially relevant courtroom drama. Centered on the alarming impact of toxic pesticide-based farming on human health, the film aims to spark meaningful conversations through its compelling narrative.

Produced by Zee Studios in association with MIG Production, The India Story is directed by Chetan DK and written and produced by Sagar B. Shinde. The film is set for a worldwide theatrical release on July 24, 2026, in Hindi, Tamil, and Telugu.

The newly released poster features Kajal Aggarwal and Shreyas Talpade surrounded by an angry crowd in a bustling vegetable market. The tense visual shows vendors hurling vegetables at the duo while accusing them, symbolizing the hostility and resistance often faced by those who dare to expose uncomfortable truths.

Adding to the intrigue is the tagline, “Slow Poison in Progress…”, which powerfully hints at the invisible threat posed by toxic pesticides in everyday food and reinforces the film’s central message.

Speaking about the poster, director Chetan DK said, “This poster reflects the price one pays for speaking the truth. When you question a system built on deception, the first reactions are fear and anger. Every frame of The India Story captures that struggle while encouraging audiences to rethink the food they consume and the beliefs they hold.”

The film’s co-producers include Swati Vinayak Saindane, Anita Jadhav, Vinayak Saindane, Kalpesh Shah, Devyani Korade, and Prem Joshi.

The technical team features cinematographer Nishant Bhagwat, music composer Mangesh Dhakde, editor Ashish Mhatre, lyricist Shakeel Azmi, and sound designer Anmol Bhave.

Blending a gripping courtroom drama with a socially significant issue inspired by real-life concerns, The India Story promises to deliver a thought-provoking cinematic experience that challenges audiences to reflect on food safety, public health, and the consequences of toxic agricultural practices.