Thursday, March 12
Shadow

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது

காதலை நம்மால் மறுபடியும் தொடங்க முடியுமா? அல்லது வாழ்க்கை நம்மை ரீசெட் பண்ணி மீண்டும் அதே உணர்ச்சிகளை வாழ வைக்கிறதா?

இந்த கேள்விகளுக்கான ஒரு சுவாரஸ்யமான பதிலைத் தேடிப் போகும் படம் தான் ‘காதல் ரீசெட் ரிபீட்’.
இயக்குநர் விஜய் உருவாக்கியுள்ள இந்த படம், ஒரு சாதாரண ரொமான்டிக் கதை போல ஆரம்பித்தாலும், டீசர் சொல்வது வேற மாதிரி விஷயம் இருக்கு என்பதுதான். காதல் – பிரிவு – மீண்டும் சந்திப்பு என்ற வழக்கமான கோட்டில் இல்லாமல், ‘ரீசெட்’ மற்றும் ‘ரிபீட்’ என்ற தலைப்புக்கு ஏற்ற மாதிரி கதையில் ஏதோ புதிர் இருக்கிறது என்பதை டீசர் நமக்கு உணர்த்துகிறது.

சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றிருக்கும் இந்த டீசர், பார்ப்பவர்களை “இது என்ன மாதிரி லவ் ஸ்டோரி?” என்று யோசிக்க வைக்கிறது.
இசை என்றால் காதல் படங்களுக்கு முதுகெலும்பு. இந்த படத்தில் இசையமைப்பாளர் Harris Jayaraj தனது மெலடிகளால் காதல் உணர்ச்சியை உயர்த்தியிருக்கிறார். ஏற்கனவே வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றிருக்க, டீசரில் வரும் பின்னணி இசையும் கவனம் ஈர்க்கிறது.

புதிய ஜோடியாக மதும்கேஷ் – ஜியா சங்கர் இணைந்திருக்கிறார்கள். இவர்களுடன் மலையாள சினிமாவில் கவனம் பெற்ற நடிகர் Arjun Ashokan முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனுபவம் மிக்க எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டவர்களும் கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா காட்சிகளை மென்மையான காதல் தோற்றத்துடன் வடிவமைத்திருக்க, எடிட்டர் ஆண்டனி காட்சிகளுக்கு ரிதம் கொடுத்துள்ளார். கலை இயக்கம், சண்டை, உடை வடிவமைப்பு என தொழில்நுட்ப அணியும் வலுவாக உள்ளது. பாடல் வரிகளில் வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் ஆகியோர் பங்களித்துள்ளனர். இசை உரிமையை T-Series நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த படம் மார்ச் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் வெளியீட்டை Romeo Pictures மேற்கொள்கிறது.

ஒரு காதல் கதையா?
அல்லது வாழ்க்கையை ரீசெட் செய்யும் ஒரு உணர்ச்சி பயணமா?
அதற்கான பதில் மார்ச் 6க்கு பிறகே தெரியும்.
Teaser Link:

 

The teaser of “Kadhal Reset Repeat”, directed by Vijay, has been released.

Can we ever start love all over again?
Or does life reset us and make us relive those same emotions once more?

That intriguing question seems to be at the heart of ‘Kadhal Reset Repeat’, directed by Vijay.

While the film may appear to begin like a conventional romantic story, the teaser suggests there’s something far more layered beneath the surface. True to its title — Reset and Repeat — the narrative hints at unexpected twists and an unusual storytelling approach. It doesn’t feel like a routine love story; instead, it leaves viewers wondering what kind of romance this truly is.

Within just a few hours of release, the teaser has gained attention across social media, sparking curiosity among audiences.

Music plays a vital role in any romantic film, and composer Harris Jayaraj brings emotional depth with his signature melodies. The previously released songs have already received a warm response, and the teaser’s background score further elevates the mood.
The film introduces a fresh on-screen pair, Madhumkesh and Jia Shankar. Joining them in a key role is Malayalam cinema’s popular actor Arjun Ashokan. Seasoned performers including M.S. Bhaskar, Jayaprakash, and Viji Chandrasekhar also add strength to the cast.
Cinematographer Aravind Krishna lends a soft, romantic visual tone to the film, while editor Antony shapes the narrative rhythm. The technical team also includes art director Saravanan Vasanth, stunt choreographer Manohar Varma, and costume designer Ruchi Munoth. Lyrics are penned by Vairamuthu, Karky, and Argus Aryan. The audio rights have been acquired by T-Series.

The film is set for a worldwide theatrical release on March 6. In Tamil Nadu, it will be distributed by Romeo Pictures.
Is it just another love story?
Or an emotional journey that explores the idea of resetting life itself?
The answer awaits on March 6.