Wednesday, December 1
Shadow

சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் இணைந்த பழம் பெரும் நடிகரின் பேரன்…!

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா மூன்றாவது முறையாக அவருடன் இணைந்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் தற்போது “தர்பார்” படம் சிறப்பாக தயாராகி வருகிறது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மிகவும் விறு விறுப்பாக ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பழம் பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா நடித்து இருப்பதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினியின் ஆரம்பகால படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் தேங்காய் சீனிவாசன். இவர்கள் கூட்டணியில் உருவான தில்லு முல்லு படம் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாப்படுகிறது. தர்பார் படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா சிவ்பிங்க் இணைந்துள்ளார்.

இவர் 2.0, பேட்ட ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரஜினியுடன் நடிக்கிறார். ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோரோடு இணைந்து எடுத்த புகைப்படங்களை ஆதித்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜெய்ப்பூரில் பிரம்மாண்ட பாடல் காட்சி ஒன்றும், வசனம் பேசும் காட்சிகளும் படமாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது படக்குழு மும்பையை மீண்டும் மையமிட்டுள்ளது. தர்பார் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ந்தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

CLOSE
CLOSE