Tuesday, December 3
Shadow

தனுஷ் ரசிகர்களுக்கு என் மீது வெறுப்பு ஏற்பட்டாலும் படலாம் – த்ரிஷா

துரை செந்தில்குமார் இயக்கியிருக்கும் ‘கொடி’ படம் மூலம் தனுஷுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் த்ரிஷா. தீபாவளி ஸ்பெஷலாக நாளை வெளியாகவிருக்கும் இப்படத்தில் கிரமாத்து பெண்ணாக நடித்திருக்கிறாராம் அவர்.
இப்படம் குறித்து அவரிடம் கேட்டபோது, “கொடி படத்தில் எனது கதாபாத்திரம் கொஞ்சம் வில்லித்தனமாக இருக்கும். நான் இதுவரை நடிக்காத கதாபாத்திரம் இது. அதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உற்சாகமாக இருந்தது.
முதலில் இந்த கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா என்று கூட தோன்றியது. தனுஷ் இல்லை என்றால் என்னால் இவ்வளவு சிறப்பாக நடித்திருந்திருக்க முடியாது. அவர் எனக்கு அவ்வளவு உதவி செய்துள்ளார். அவர் மீதுள்ள மரியாதை பல மடங்கு அதிகரித்துவிட்டது” என்றார்.
மேலும், “தனுஷ் சுயநலம் இல்லாத நடிகர். நான் கொடி படத்தில் தனுஷை பார்த்து சொல்லும் சில வசனங்களை கேட்டு அவரது ரசிகர்களுக்கு என் மீது வெறுப்பு ஏற்பட்டாலும் படலாம். இதை அவரிடமே தெரிவித்துள்ளேன்” என்றார்.

Leave a Reply