Tuesday, April 21
Shadow

அஜித் படத்தில் முதல்முறையாக நடிக்கும் காமெடி நடிகர்

விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சத்யேஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அஜித் – சிவா 4-வது முறையாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.