Thursday, June 25
Shadow

விக்ரம் மகன் துருவ் படத்தின் டீசரை விமர்சனம் ஏன் ? சரியா !

நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் வர்மா படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்திலேயே இந்த டீசர் 35 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. ஒரு அறிமுக நடிகருக்கு இந்த அளவிலான வரவேற்பு அதிகம்தான்.

இருப்பினும் வர்மா டீசரில் துருவ் நடிப்பைப் பற்றி சிலர் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் விமர்சனங்களும், கருத்துக்களும் ஒப்பீடாகவே அமைந்திருக்கிறது. தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்தான் இந்த வர்மா. தெலுங்கு படத்தில் நாயகனாக நடித்த விஜய் தேவரகொன்டா அளவிற்கு துருவ் நடிக்கவில்லை என பலர் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு முதல் பட அறிமுக நடிகர் மீது இவ்வளவு வன்மத்துடன் சிலர் விமர்சனங்களை வைப்பது ஏன் என்று தெரியவில்லை. அதிலும் ஒரு டீசரைப் பார்த்தே அவர் நடித்திருக்கிறார், நடிக்கவில்லை என்று சொல்வதெல்லாம் ஓவரான விமர்சனம்தான்.