
காட் பிக்சர்ஸ் பிரபுசாலமன் தயாரிக்க , ஆர்.பி.கே எண்டர்டைமன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ ரூபாய் “ இந்த படத்தை E 5, ஜே.கே குரூப்ஸ் டாக்டர் ஜே.ஜெயகிருஷ்ணன், காஸ்மோ வில்லேஜ் சிவகுமார் இருவரும் இணைந்து உலகமுழுவதும் வெளியிடுகிறார்கள்.
சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்கள் இருவரும் பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் அறிமுகமானவர்கள். மற்றும் கிஷோர்ரவிசந்திரன், சின்னிஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா.
சாட்டை படம் எனது முதல் படம்…இதுவும் எனது முதல் படம் தான். ஏனென்றால் அதுவேறு கதை களம், இது வேறு கதை களம். பணத்தாசை தான் எல்லா தீமைகளுக்கும் ஆணி வேர். தேனியில் லாரி டிரைவராக இருக்கும் பரணி – பாபு இருவரும் நண்பர்கள். அவர்களுக்கு இந்த உலகத்தில் இருக்கும் ஒரே சொத்து, சொந்தம் எல்லாமே ஒரு லாரி மட்டும் தான். அந்த லாரிக்கு பணம் கட்ட ஒரு பெரிய சவாரியாக கோயம்பேடு மார்கெட் வருகிறார்கள். ஊர் திரும்பும் போது அவர்களுக்கு ஏற்பட்ட சின்ன பணத்தாசையால் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டு ஊருக்கு போனார்களா இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை.
பணம் நிம்மதி தராது என்று எந்த ஒரு ஏழையும் சொல்வதில்லை ! நிம்மதி தராத பணம் தேவையில்லை என்று எந்த பணக்காரனும் பணத்தை ஒதுக்குவதும் இல்லை ! இப்படி எல்லோரது வாழ்க்கையிலும் இன்றியமையாகி போன பணத்தை பற்றிய ஒரு பயணம் தான் இந்த “ ரூபாய் “ இதில் காமெடி, காதல் கலந்து உருவாக்கி உள்ளோம்.
படப்பிடிப்பு சென்னை, மூனார், மறையூர், தேனி போன்ற இடங்களில் நடிபெற்றுள்ளது என்றார் இயக்குனர் எம்.அன்பழகன்.
இப்படத்தின் இசை மற்றும் படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகின்றனர்