Friday, November 14
Shadow

உறியடி 2 திரை விமர்சனம் (4/5)

கடந்த 2016ம் ஆண்டு பேசும்படியான படமாக அமைந்த உறியடி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் பாகத்தில் இயக்கி நடித்த விஜயகுமாரே இதிலும் நாயனாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதையை இங்கே பாப்போம்.

கெமிக்கல் ஆலை ஒன்றில் ஏற்படும் லீக் காரணமாக அந்த ஆலைக்கு அருகே உள்ள கிராமத்தில் பலர் உயிரிழக்கின்றனர். இந்த சம்பவத்தால் பலியானாவர்களுக்கு இளைஞர் ஒருவர் எப்படி நீதி வாங்கி கொடுக்கிறார் என்பதே படத்தின் கதை.

படத்தின் ஹீரோ விஜயகுமார், ஜாலியாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர். இந்நிலையில், கெமிக்கல் ஆலை ஒன்றில் ஏற்படும் விபத்து ஒன்றில் பலர் உயிர் இழக்கின்றனர். இது அவரை அதற்காக போராட வைக்கிறது. புது முகங்கள் கொடுத்த கேரக்டரை சரியாக செய்துள்ளனர். இந்த படத்தின் பலமே புதுமுகங்கள் தான் என்று சொல்லும் அளவுக்கு அட்டகாசமாக உள்ளது.

படத்தின் தொழில்நுட்ப விஷயங்களை பார்க்கும் போது, எளிய மனிதர்களுக்கு புரியும் அளவில் அழக்காக காட்டியுள்ளது கேமரா. இதற்கு பெரிய ஹாட்ஸ்அப் கொடுக்க வேண்டும். இன்டர்வெல் பிளாக் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

படத்தில், நாம் நமக்காக அரசியலை தேர்வு செய்ததால் மட்டுமே இனி பிழைக்க முடியும் என்பதை உணர்த்துகிறது. படத்தின் கிளைமேக்ஸ் ரசிகர்களை வெகுவாக கவரும். தூத்துக்குடி மக்களுக்காகவே எடுக்கப்பட்ட கதை.

படத்தின் பிளஸ்: விஜயகுமார் நடிப்பு, கேமரா, படத்தின் வலுவான கதை

மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.