

தமிழ் சினிமாவில் ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி’ போன்ற பல படங்களில் நடிச்சு பிரபலமான நடிகை நந்திதா ஸ்வேதா.
சமீபத்தில் இவர் நடிப்பில் ரிலீஸான படம் ‘7’. இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வந்தது.
தற்போது, நந்திதா ஸ்வேதாவின் கால்ஷீட் டைரியில் வைபவ்வின் ‘டாணா’, எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, சிபிராஜின் ‘கபடதாரி’ மற்றும் ‘IPC 376’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.
இதில் ‘டாணா’ படத்தை யுவராஜ் சுப்ரமணி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ் – அப்படீங்கறவர் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தை வருகிற ஜனவரி 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
அதுக்கு முன்னாடி இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடும் நடக்குதாம்
