
கடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாவலை, சாகித்ய அகாடமி 23 மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறது. முதல் மொழியாக இந்தி மொழியில் ‘நாகபானி வன் கா இதிகாஸ்’ என்ற பெயரில் மொழியறிஞர் எச்.பாலசுப்பிரமணியன் மொழிபெயர்த்து இருக்கிறார்.
சாகித்ய அகாடமியால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகமானது, தற்போது இந்தியில் வெளிவந்த இந்தியாவின் சிறந்த புத்தகம் என்ற விருதை பெற்று இருக்கிறது. இந்திய வர்த்தக கூட்டாண்மை கழகம் (எப்.ஐ.சி.சி.ஐ) இந்த விருதை வழங்க இருக்கிறது. மத்திய அரசின் கலாசார துறை அமைச்சகம் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.
