Tuesday, April 21
Shadow

போலந்து நாட்டில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் “சீமாராஜா”

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’ படம், போலந்து நாட்டில் ரிலீஸாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது சீமராஜா திரைப்படம் காரணம் சிவகார்த்திகேயன் மற்றும் போன்ராம் இயக்கத்தில் வெளிவந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது அதோடு சிவகார்த்திகேயனை மிக பெரிய அந்தஸ்தை கொடுத்தது இந்த இரண்டு படங்கள் என்பதால் மிகபெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர் அதற்கு ஏற்ப இந்த படம் வெளியாவதுக்கு முன்னே பல சாதைனைகள் செய்து வருகிறது

பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘சீமராஜா’. கெஸ்ட் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்துடன் சேர்ந்து சமந்தாவின் ‘யு டர்ன்’, விஜய் சேதுபதியின் ‘96’, கார்த்திக் நரேன் இயக்கியுள்ள ‘நரகாசூரன்’ ஆகிய படங்களும் ரிலீஸாக இருக்கின்றன.

‘சீமராஜா’ படம், போலந்து நாட்டிலும் ரிலீஸாக இருக்கிறது. தமிழ் பேசக்கூடிய மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் அங்கு வசிக்கின்றனர். இதுவரை ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் மட்டுமே அங்கு ரிலீஸாகியிருக்கின்றன. தற்போது ‘சீமராஜா’வும் வெளியாக இருப்பதால், சந்தோஷத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். செவந்த் சென்ஸ் சினிமாட்டிக்ஸ் என்ற புதிய விநியோக நிறுவனம், போலந்து நாட்டின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறது