இயக்குனர் சுந்தர் .C இயக்கும் படங்கள் என்றாலே காமெடி கலந்த மாசால படங்கள் அதிலும் குறிப்பாக காமெடி படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார். அதில் ஒரு நல்ல குடும்ப கதையை சொல்லி இருப்பார் அதே பார்முலா தான் இந்த படமும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’

இந்தபடத்தில் சிம்பு, கேத்ரின்தெரசா, மேகாஆகாஷ், ரம்யாகிருஷ்ணன், நாசர், சுமன், பிரபு, யோகிபாபு, ரோபோஷங்கர், வி.டி.வி.கணேஷ், ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், ராஜ் கபூர், நட்புக்கா மகத் மற்றும் பலர் நடிப்பில் கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் ஹிப் ஹாப் ஆதி இசையில் சுந்தர் .C இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’

மிக பெரிய பணக்காரர் நாசர் ஸ்பின் நாட்டில் மிக பெரிய பணக்காரர் பல வியாபாரங்கள் அவரின் பேரன்தான் சிம்பு எவ்வளவு பணம் இருந்தாலும் நாசர் வாழ்கையில் நிம்மதி இல்லை அதற்கு காரணம் அவரின் மகளின் பிரிவு அதற்கு காரனம்மும் நாசர் தான் ரம்யா கிருஷ்ணா பிரபுவை காதலித்து திருமணம் புரிவார் அனால் இது பிடிக்காமல் நாசர் ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரபுவை வேட்டை விட்டு துரத்திவிடுவார் தன் காதலை ஏற்பார் என்ற தைரியத்தில் காதலித்த பிரபுவை திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து போவார் அனால் அங்கு நடந்தது அசிங்கம் இதனால் இனி எனக்கு அப்பா இல்லை என்று வெளியேறிவிடுவார் சொத்து சுகம் எதுவும் வேண்டாம் என்று

 

இதனால் மனம் உடைந்த நாசர் தன் மகன் சுமன் பேரன் சிம்பு இவர்களை அழைத்து கொண்டு ஸ்பின் நாட்டில் வசித்து வருவார் அங்கு வியாபாரத்தில் கொடி கட்டி பல லட்சம் கோடி சொத்து சேர்த்து வைத்து இருப்பார் இருந்தாலும் தான் சேர்த்த சொத்தில் இருபத்தி ஐந்து சதவீதம் மகள் பேரில் வைத்து இருப்பார் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மகளுக்கு பரிசு பொருள் அனுப்பி வைப்பார் ஆனால் அதை அவர் திருப்பி அனுப்பிவிடுவார் .

 

இதனால் சுமன் அப்பா நாசர் இருவரும் இகவும் வருத்தபடுவார்கள் ஒரு கட்டத்தில் பங்குதாரர்கள் பிரச்னையும் வரும் அந்த நேரத்தில் நாசர் தன் மகள் மீண்டும் நம் குடும்பத்துடன் வரவேண்டும் என்று சிம்புவிடம் சொல்லுவார் எப்படியாவது உங்கள் அத்தையை என்நாடும் நம் குடும்பத்தோடும் சேர்த்து வை என்று சொல்லுவார் .

 

இதனால் இந்தா வரும் சிம்பு தன் அத்தை குடும்பம் ஆன ரம்யா கிருஷ்ணன் வீட்டில் கார் டிரைவராக வேலைக்கு சேர்வார் அங்கு தன் அக்கா மகள் மீது காதலும் வயப்படுவார் இந்த காதல் சேர்ந்ததா மீண்டும் இந்த குடும்பம் இணைந்ததா என்பது தான் மீதி கதை

 

இயக்குனர் சுந்தர்.C தனக்கே ஆனா மாசால பாணியில் இந்த கதை சொல்லி இருக்கிறார் என்று தான் சொல்லணும் இந்த படம் தெலுங்கில் மிக பெரிய வெற்றி படம் படத்தில் மிக முக்கியம் காமெடி தான் காட்சிக்கு காட்சி நகைசுவையில் நம்மை சிரிக்க வைத்துள்ளார் அதோடு கொஞ்சம் சென்டிமென்ட்யில் உருகவும் வைத்துள்ளார்.

 

சிம்பு சினிமாவில் செய்த விஷயங்களை காமெடி காட்சிகளாக வைத்து அதுக்கு VTV.கணேஷ் வைத்து நக்கல் காமெடி காட்சிகள் அரங்கத்தை அதிரவைத்துள்ளர் . முதல் முறையாக ரோபோஷங்கர் சிம்பு காமெடி அதோடு யோகிபாபு அடேகப்பா அரங்கம் சும்மா சிரிப்பில் அதிருது அதேபோல கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை கண் கலங்கவும் வைக்கிறார் .

 

சிம்பு நகைசுவை கலந்த வேடத்தில் சும்மா பின்னி இருக்கிறார் என்று தான் சொல்லணும் புதிய லுக் மிகவும் அற்புதம் அவரின் மீசை தாடி ஹேர் ஸ்டைல் எல்லாம் சுப்பர் அனால் கொஞ்சம் குண்டாக தெரிகிறார். மற்றபடி படத்துக்கு மிக பெரிய பிளஸ் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பில் பின்னி இருக்கிறார்

 

மேகா ஆகாஷ் படத்தின் நாயகி சிம்புக்கு இணையாக நடித்துள்ளார் என்று சொல்லலாம் சிம்புவுடன் மோதும் காட்சிகள் செம சுப்பர் அதேபோல காதல் காட்சிகளில் பம்மும்போது செம அதேபோல அழகிலும் வெரி நைஸ் படத்துக்கு மிகவும் பலமாக இருக்கிறார்.

 

கேத்தரின் தெராச அழுகு பதுமை போல வந்து போகிறார் பெரிதாக காட்சிகள் இல்லை இருந்தும் கொடுத்த பாத்திரத்தை கனகச்சிதமாக செய்துள்ளார். அதே போல மகத் குறைந்த காட்சிகள் சிம்பு படம் வேறு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். பிரபு நாசர், சுமன்,  இவர்களும் கொடுத்த வாய்ப்பை கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருகிறார்கள்

 

படத்தின் பலம் VTV கணேஷ் ரோபோ சங்கர் யோகிபாபு இந்த மூவரின் காமெடி லூட்டி படத்ஹதி மிகவும் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது அதிலும் இரண்டாம் பாகத்தில் யோகிபாபு நம்மை வயறு வலிக்க சிரிக்க வைக்கிறார் சிம்புவுக்கு அவர் கொடுக்கும் டைமிங் காமெடி வாவ் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது

 

ரம்யா கிருஷ்ணன் சொல்லவா வேணும் தன் பாத்திரத்தை மிகவும் உணர்ந்து நடித்து இருக்கிறார் அந்த கம்பீரம் ஸ்டைல் எல்லாமே கதைக்கு மிகவும் பலமாக இருக்கிறார். படம் காமெடி செண்டிமெண்ட் சண்டை காதல் கிளுகிளுப்பு இப்படி எல்லாம் சேர்ந்த ஒரு கலவையாக கொடுத்து இருக்கிறார் . இயக்குனர் சுந்தர்.C

 

இந்த படம் தெலுங்கின் அதாரிண்டிக்கி தாரி எதி படத்தின் தமிழ் ஆக்கம் தான் இந்த படம் அனால் என்ன ஒரு விஷயம் என்றால் இதே மாதிரி கதை இயக்குனர் சுந்தர்.C படம் ஆம்பளையும் இதேபோல தான் இருக்கும் மொத்தத்தில் படம் கதை இவையெல்லாம் மீறி அரங்கத்துக்குள் போய்விட்டு வரும்போது கவலை எல்லாம் மறந்து சிரித்துவிட்டு வருவோம் .

 

மொத்தத்தில் நான் ராஜாவாதான் வருவேன் காமெடி மாசாலா Rank 3/5

 

Related