Thursday, November 19
Shadow

‘வாரணாசி’ ரிலீஸ் தள்ளிப்போனதால் மாறும் ஏப்ரல் மாதத் திரைப்பட வெளியீடுகள் – ஏப்ரல் 14-க்கு முன்கூட்டியே வெளியாகிறதா ‘தர்மன்’?

‘வாரணாசி’ ரிலீஸ் தள்ளிப்போனதால் மாறும் ஏப்ரல் மாதத் திரைப்பட வெளியீடுகள் – ஏப்ரல் 14-க்கு முன்கூட்டியே வெளியாகிறதா ‘தர்மன்’?

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படம் ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், IMAX உள்ளிட்ட உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள 18-க்கும் மேற்பட்ட திரையிடல் தொழில்நுட்ப வடிவங்களுக்கு இப்படத்தை மாற்றியமைக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக, படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், படத்தின் தொழில்நுட்பப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய படக்குழுவினருக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.

‘வாரணாசி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போகும் நிலையில், ஏப்ரல் மாதத்தில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள மற்ற திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதிகளிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

குறிப்பாக, ஏப்ரல் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த ‘தர்மன்’ திரைப்படத்தை, இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களின் வெளியீட்டுத் திட்டங்களில் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தர்மன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

‘Varanasi’ Release Postponement May Reshape April Movie Releases; Will ‘Dharman’ Hit Theatres Early on April 14?

The release plans for several Tamil and Telugu films scheduled to hit theatres in April may undergo changes following the postponement of director S.S. Rajamouli’s highly anticipated magnum opus, ‘Varanasi’.

The film was initially scheduled for a grand theatrical release on April 7. However, due to technical challenges involved in converting the film into IMAX and 18 other theatrical formats for audiences worldwide, the makers reportedly require additional time to complete the process. This has led to a delay in the film’s planned release.

With ‘Varanasi’ moving out of its original release window, the release schedules of several other Tamil and Telugu films slated for April are also expected to be affected.

In particular, ‘Dharman’, which was earlier scheduled to arrive in cinemas on April 30, is reportedly being considered for an early release on April 14. The makers are said to be planning to prepone the film’s theatrical release by more than two weeks.

With the summer holiday season approaching, the April release calendar of Tamil and Telugu cinema could witness further changes. Moviegoers are now eagerly awaiting an official announcement from the makers of ‘Dharman’ regarding its revised release date.