Monday, July 13
Shadow

‘வீர ஜெயதீரா’ பாடலால் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்ற ‘பாரதவர்ஷா’… போர்வீரராக டி. கோபிசந்தின் பிரம்மாண்ட அவதாரம்!

‘வீர ஜெயதீரா’ பாடலால் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்ற ‘பாரதவர்ஷா’… போர்வீரராக டி. கோபிசந்தின் பிரம்மாண்ட அவதாரம்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான டி. கோபிசந்த், தனது திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிலான பிரம்மாண்டமான வரலாற்றுப் படைப்பாக உருவாகி வரும் ‘பாரதவர்ஷா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்த தயாராகி வருகிறார். இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் உருவாகும் இந்த வரலாற்று ஆக்ஷன் காவியத்தை, தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி தனது ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறார். பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, நீண்ட தலைமுடி, அடர்ந்த தாடி, வீரமிக்க தோற்றம் என போர்க்கள நாயகனாக டி. கோபிசந்த் காட்சியளித்த விதம் ரசிகர்களிடையே ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

அந்த எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் தற்போது படத்தின் முதல் பாடலான ‘வீர ஜெயதீரா’ வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் அனுதீப் தேவ் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை தீபக் ப்ளூ மற்றும் லட்சுமி மேகனா இணைந்து பாடியுள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதியுள்ள வரிகள் பாடலுக்கு தனித்துவமான உணர்வை வழங்குகின்றன.

காஷ்மீரின் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், வெறும் இசை அனுபவமாக மட்டுமல்லாமல் காட்சியமைப்பிலும் ரசிகர்களை கவர்கிறது. பிரம்மாண்டமான காட்சிகள், போர்வீரனின் உற்சாகம், காதல் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ள இந்த பாடல், திரைப்படத்தின் தரத்தையும் தயாரிப்பின் அளவையும் வெளிப்படுத்துகிறது.

இயக்குநர் சங்கல்ப் ரெட்டி, இந்திய வரலாற்றில் பெரிதாக பேசப்படாத ஒரு முக்கியமான காலக்கட்டத்தை திரையில் உயிர்ப்பிக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. வரலாற்று பின்னணியுடன் உணர்வுப்பூர்வமான கதையையும், அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களையும் இணைத்து உருவாக்கப்படும் இந்தப் படம், இந்திய சினிமாவின் முக்கியமான வரலாற்றுப் படைப்புகளில் ஒன்றாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், டி. கோபிசந்த் தனது வழக்கமான ஆக்ஷன் கதாபாத்திரங்களைத் தாண்டி, இதுவரை நடித்திராத வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளதால், அவரது ரசிகர்களிடையே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ரிது வர்மா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படம், வரலாறு, உணர்வு, காதல் மற்றும் போராட்டம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய திரை அனுபவமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

‘வீர ஜெயதீரா’ பாடலின் வரவேற்பை தொடர்ந்து, ‘பாரதவர்ஷா’ திரைப்படம் தற்போது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

‘Veera Jayadheera’ Song Takes Expectations Sky-High; D. Gopichand’s Grand Warrior Avatar in ‘Bharathavarsha’ Creates Buzz

Actor D. Gopichand is gearing up to surprise audiences with Bharathavarsha, a grand historical action drama that is being touted as the biggest and most ambitious film of his career. Directed by Sankalp Reddy and produced on a massive scale by Srinivasa Chitturi under the banner of Srinivasa Silver Screen, the film is being presented by Pavan Kumar.

The title glimpse released in April generated significant buzz across social media platforms. D. Gopichand’s striking appearance as a fearless warrior—with long hair, a thick beard, and a commanding screen presence—instantly captured the attention of fans and heightened anticipation for the project.

Taking that excitement a step further, the makers have now unveiled the film’s first single, “Veera Jayadheera.” Composed by Anudeep Dev, the song is sung by Deepak Blue and Lakshmi Meghana, while Academy Award-winning lyricist Chandrabose has penned the lyrics.

Shot amidst the breathtaking landscapes of Kashmir, the song is not only a musical treat but also a visual spectacle. Featuring lavish production values and stunning cinematography, it offers audiences a glimpse into the grandeur and scale of the film while reflecting the spirit, courage, and emotions of its central character.

Known for his innovative storytelling and technical expertise, director Sankalp Reddy is bringing to life a lesser-explored yet significant chapter of Indian history. The film promises to blend emotional depth with spectacular visuals, creating a cinematic experience that is both engaging and immersive.

For D. Gopichand, Bharathavarsha marks a major departure from his usual action-oriented roles. The actor is set to portray a unique and challenging character unlike anything he has attempted before, further increasing curiosity among moviegoers and fans alike.

Starring Ritu Varma as the female lead alongside D. Gopichand, Bharathavarsha is shaping up to be a grand cinematic spectacle that combines history, emotion, romance, and action on an epic scale.

With the successful launch of “Veera Jayadheera,” the film has now emerged as one of the most eagerly awaited historical action dramas in South Indian cinema.