Friday, June 2
Shadow

நயன்தாரா கனவை கலைத்த விக்னேஷ் சிவன்

டிவிட்டர் நடு நடுங்க, ஃபேஸ்புக் கதிகலங்க, தற்போது அத்தனையிலும் விக்னேஷ் சிவன் – சூர்யா கூட்டணி படம் பற்றிய தகவல்கள் பரவிக்கொண்டிருக்கிறது.

அஜித்தின் கால்ஷீட்டை வாங்க நடாய் நடந்து ஏமாந்துப் போன விக்னேஷ் சிவன், சூர்யாவின் கால்ஷீட்டையும் எட்டாக்கணியாக நினைத்திருக்க, எப்படியோ சூர்யாவுக்கு ஏற்றவாறு அட்ஜெஸ்ட் செய்து கால்ஷீட்டை பெற்றுவிட்டார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, காதலி நயந்தாராவின் கனவில், விக்னேஷ் சிவன் கள்ளைபோட்டுள்ள தகவல் கசிந்துள்ளது. அதாவது, அஜித், சூர்யா இருவரும் நிராகரித்திருந்த நிலையில், விக்னேஷ் சிவனையே ஹீரோவாக நடிக்க சொல்லி நயந்தாரா ஐடியா கொடுத்தாராம். நான் ஜோடியாக நடிக்கிறேன், பெரிய டெக்னிஷியன்களை வச்சி படம் எடுக்கலாம், நீயே ஹீரோவாயிடு, என்று அவர் சொன்னதை கேட்டு, அதற்கான வேலையிலும் விக்னேஷ் சிவன் இறங்க, திடீரென்று சூர்யாவிடம் இருந்து அழைப்பு வந்ததும், நயந்தாராவின் பேச்சை உதாசினப்படுத்திவிட்டு, தனது ஹீரோ அவதாரத்திற்கும் ஸ்டாப் கொடுத்து விட்டாராம்.

பாவம் நயந்தரா, தனது நிஜ ஹீரோவை, சினிமாவிலும் ஹீரோவாக்க நினைத்து ஏமாற்றம் அடைந்துவிட்டார்.

Leave a Reply