விஜய்6௦ படபிடிப்பு படு வேகமாக நடிக்கிறது நான்கு கட்ட படபிடிப்பு முடிந்து இப்ப சின்ன இடைவெளி படபிடிப்புக்கு மீண்டும் செப்டம்பர் மாதம் படபிடிப்பு ஆரம்பம் படத்தின் முதல் பார்வை தீபாவளிக்கு வெளியிட திட்ட மிட்டு உள்ள இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் 60-வது படத்திற்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ தான் இந்த படத்தின் டைட்டில் என வதந்தி கிளம்பி அதனை படக்குழுவினர் மறுத்த செய்தியை பார்த்தோம்.
இந்நிலையில் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இந்த படத்தின் டைட்டில் குறித்த ரகசிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்த படத்தின் டைட்டில் விஜய்யின் முந்தைய படங்களின் டைட்டில்களான கத்தி, துப்பாக்கி, தெறி, ஜில்லா வரிசையில் ஒரே வார்த்தை உள்ள டைட்டில் என்று கூறப்படுகிறது.
ஆனால், பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியான தகவல் படி, மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படத்தின் தலைப்பை வைக்கலாம் என்று விஜய்யே டைரக்டர் பரதனுக்கு யோசனை தெரிவித்துள்ளாராம். கதைப்படி, இந்த ‛தளபதி’ டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்பதால் இதையே விரைவில் அறிவிப்பார்கள் என்று அப்படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். ஆக, இளையதளபதி விஜய் விரைவில் தளபதி ஆகிறார்.