

தீபாவளிக்கு வந்த படங்களின் வர்த்தக நிலவரம் குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் பிரபல வார நாளிதழ்க்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் தீபாவளி ரிலிஸ் படங்களின் வசூல் நிலவரம் பற்றி கூறியதை பார்ப்போம்
”தீபாவளிக்கு ரிலீஸான படங்கள் இரண்டுமே நல்ல ஓட்டம்தான். ‘படம் எங்களுக்கு லாபம்’ என அர்ச்சனா கல்பாத்தியே சொல்லியிருக்காங்க. ரசிகர்களுக்கு வேறு என்ன வேண்டும்?” என்றவரிடம், ”தயாரிப்பாளர்கள் ஓகே, விநியோகஸ்தர்கள் ஹேப்பியா?” என்று கேட்டோம். ” ‘கைதி’யைப் பொறுத்தவரை எஸ்.ஆர்.பிரபு சொந்தமாக ரிலீஸ் செய்துள்ளார். நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் இருப்பதால் படம் லாபத்தில் சென்றுகொண்டிருக்கிறது.
‘பிகில்’ படத்தைப் பொறுத்தவரை படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு கையைக் கடிக்காமல் படம் பிரேக்-ஈவன் ஆகிவிட்டது. போட்ட பணம் அப்படியே வந்துவிட்டது. ஆனால், பெருந்தொகையை முதலீடுசெய்து, அது போட்ட அளவிலேயே பணம் திரும்பி வருவதற்கு ஏன் இந்தத் தொழில் செய்ய வேண்டும், லாபம் கிடைக்க வேண்டாமா? நல்ல லாபம் கிடைத்தால்தானே விநியோகஸ்தர்கள் தொடர்ந்து இந்தத் தொழிலில் இருப்பார்கள்.
ஒரு சில படங்கள் வெறும் ரசிகர்களுக்காகவே எடுக்கப்படுவதுதான் பிரச்னை. அந்த நிலைமை மாற வேண்டும். எல்லாத் தரப்பினருக்குமான படங்களை எடுத்தால்தான் தியேட்டருக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் வருவார்கள். தமிழ் சினிமா ஹீரோக்கள் இதை கவனத்தில்கொள்ள வேண்டும். என்று குறிப்பிட்டு இருந்தார். மொத்தத்தில் படம் லாபம் தான்
