டுவிட்டர் முக நூல் ஆகியவற்றில் சினிமா பிரபலங்கள் டுவிட்டரைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டிரென்டிங்கிலும் டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் தான் பிரபலமானவை. அந்த விதத்தில் பேஸ்புக்கை பின்னுக்குத் தள்ளி டுவிட்டர் தான் அதிகமாக பேசப்படுகிறது.

2018ம் ஆண்டுக்கான டுவிட்டர் ஹேஷ்டேக்குகளில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவற்றின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் நடித்து வெளிவந்த ‘சர்கார்’ படத்தின் ஹேஷ்டேக் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

அஜித் நடித்து பொங்கலுக்கு வெளிவர உள்ள ‘விஸ்வாசம்’ ஹேஷ்டேக் இரண்டாவது இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் பரத் அனி நேனு, 4வது இடத்தில் அரவிந்த சமேதா, 5வது இடத்தில் ரங்கஸ்தலம், 6வது இடத்தில் காலா, 7வது இடத்தில் பிக் பாஸ் தெலுங்கு 2, 8வது இடத்தில் மீடூ, 9வது இடத்தில் விசில் போடு, 10வது இடத்தில் ஐபிஎல் 2018 ஆகியவை இடம் பெற்றுள்ளன.

டாப் 10 இடங்களில் “சர்கார், விஸ்வாசம், காலா, விசில் போடு” ஆகியவை தமிழ்நாடு சம்பந்தப்பட்டவை. தென்னிந்திய அளவில் டுவிட்டரைப் பொறுத்தவரையில் ‘சர்கார்’ மூலமாக விஜய்யும், ‘விஸ்வாசம்’ மூலமாக அஜித்தும் தான் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்ற நடிகர்கள் அனைவரும் இவர்களுக்குப் பிறகுதான் இருக்கிறார்கள்.

Related