Friday, December 6
Shadow

விஜய்யிடம் பிடித்த விஷயங்கள் பட்டியல் இடும் இயக்குனர் பரதன்

அழகிய தமிழ் மகன் என்ற தோல்வி படத்தை கொடுத்தாலும் இந்த கதை மீதும் என் மீதும் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை கொடுத்தார் விஜய் என்று இயக்குனர் பரதனே கூறியுள்ளார். அதற்காகவே இந்த படம் பைரவா மிக பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்று நான் மட்டும் இல்லை அவரும் கடின உழைப்பை போடுகிறார்.

தற்போது இவர் பைரவா படப்பிடிப்பில் பரபரப்பாக காணப்படுகிறார்.

இவரது சமீபத்திய பேட்டியில் விஜய் பற்றி கூறியதாவது…

சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அமைதியா இருக்கார். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார்.

காலையில சூட்டிங் வந்தார்ன்னா பேக் அப் சொல்றவரைக்கும் இருப்பார்.

நடந்து முடிந்த எதையும் பேசமாட்டார். மத்தவங்கள குறை சொல்ற பழக்கம் இல்லை.

இன்னைக்கு நம்ம வேலைய சிறப்பாக பண்ணிட்டோமா அது போதும் என நினைப்பவர் அவர்.

இது எல்லாம் விஜய்க்கிட்ட கத்துக்க வேண்டிய விஷயம்” என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply