Tuesday, October 4
Shadow

நவம்பரில் இத்தனை படங்களா? தமிழ் சினிமா அதிரடி!!

தமிழ் சினிமாவின் வளர்ச்சி உலகத்தரத்தில் உயர்ந்து வருகிறது நல்ல கதையமைப்பு சிறந்த தொழில்நுட்பம் என நம் தமிழ் சினிமாவின் வளர்ச்சி உலக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் உள்ளது அந்த காலத்தில் எல்லாம் திருவிழாக்களில் படம் வெளியாகும் இப்போது எல்லாம் படம் வெளியனாவே திருவிழா தான் என்ன ஒன்று வருடத்தின் எல்லா நாலும் திருவிழா வாகா இருக்கிறது அது தான் சற்று சலிப்பு

சரி அடுத்த மாதம் எத்தனை படம் வெளியாகிறது என்று பார்போம் இந்த தீபாவளிக்கு காத்தியின் ‘காஷ்மோரா’, தனுஷின் ‘கொடி’, நதியா நடித்துள்ள ‘திரைக்கு வராத கதை’, மா.கா.பா.ஆனந்தின் ‘கடலை’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தீபாவளி முடிந்ததும் அடுத்த மாதம் (நவம்பர்) வரிசையாக நிறைய தமிழ் படங்கள் ரிலீசாகவிருக்கிறது.

அதில் ஏற்கெனவே ரிலீஸ் தேதி அறிவித்த வெங்கட் பிரபுவின் ‘சென்னை -28 இரண்டாம் பாகம்’ நவம்பர் 10-ஆம் தேதி வியாழக் கிழமை வெளியாகவிருக்கிறது. இதனை தொடர்ந்து மறு நாள் (நவம்பர் 11-ஆம் தேதி) வெள்ளிக்கிழமை ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘புரூஸ்லீ’, ஜெயராம் மகன் காளிதாஸ் நடித்துள்ள ‘மீன் குழம்பும் மண் பானையும்’ ஆகிய படங்கள் ரிலீசாகிறது.

இதனை தொடர்ந்து அடுத்த வாரம் 18-ஆம் தேதி வெள்ளிக் கிழமை விஷாலின் ‘கத்திசண்டை’, விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘சைத்தான்’ ஆகிய படங்கள் வெளியாகவிருக்கிறது. இதனை தொடர்ந்து வரும் வாரத்தில் 25-ஆம் தேதி விக்ரம் பிரபுவின் ‘வீரசிவாஜி’, ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் வெளியாக்விருக்கிறது. இந்த படங்களுடன் சி.வி.குமார் இயக்கி, தயாரித்து வரும் ‘மாயவன்’ திரைப்படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்காப்படுகிறாது.

Leave a Reply