
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் விஜய் தான். இவர் படம் எப்போது வரும் என ஒட்டு மொத்த திரையரங்குகளும் காத்திருக்கும். காரணம் அப்போது தான் கேண்டின் முதல் பார்கிங் வரை வசூல் மழை கொட்டும்
ஏனெனில், அவரை வைத்து படம் எடுத்தாலே ஹிட் தான் என்ற நிலை உருவாகிவிட்டது, இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ராஜன் ஒரு சில தகவல்களை கூறியுள்ளார்.
இதில் குறிப்பாக மெர்சல் படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்று குறிப்பிட்டு இருந்தார், அதிலும் அட்லீயால் தான் அந்த படம் நஷ்டம் என்றும் தெரிவித்தார்.
மேலும், விஜய் படத்தை எல்லாம் 70 நாட்களில் முடித்துவிட வேண்டும், இன்னும் வேண்டுமென்றால் 90 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், அட்லீ 150 நாட்கள் எடுத்துக்கொண்டு பல காட்சிகள் எடுத்து அதையெல்லாம் படத்தில் வைக்காமல் இருந்துவிட்டார்.
விஜய் படத்தில் என்ன குவாலிட்டி இருக்கின்றது, அவர் ஒரே மாதிரி தானே எடுத்து(நடிப்பதை அப்படி குறிப்பிட்டுள்ளார்) வருகின்றார் என்ற கூற ரசிகர்களிடம் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
