‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி – இயக்குநர் கோகுல் கைகோர்த்துள்ள படம் ‘ஜுங்கா’. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ சூப்பர் ஹிட் என்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயீஷா நடித்துள்ளார்.
மேலும், காமெடியில் கலக்க யோகி பாபு நடிக்கிறார். சித்தார்த் விபின் இசையமைத்து வரும் இதற்கு டட்லி ஒளிப்பதிவு செய்து வருகிறார், இதனை ‘ஏ&பி குருப்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம்.
இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தின் சிங்கிள் டிராக்கை வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.