Saturday, February 15
Shadow

நயன்தாரா-விஜய் சேதுபதி திடீர் மோதல்

விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் நானும் ரவடி தான் படம் இந்த படத்தை தயாரித்தது நம்ம தனுஷ் விஜய் சேதுபதி நயன்தாரா இந்த வெற்றி ரசிகர்கள் மிகவும் வரவேற்றனர் இந்த கூட்டணி மீண்டும் எப்போ இணையும் என்ற ஆவலோடு இருக்கும் நேரத்தில் இருவரும் நேருக்கு நேர் மோத தயாராகி வருகின்றனர். ஆமாங்க

நயன்தாரா படமும், விஜய் சேதுபதி படமும் ஒரேநாளில் மோதவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.நயன்தாராவும் – விஜய் சேதுபதியும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படம் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதா? என்று தலைப்பை வைத்து யாரும் தப்பு கணக்கு போட்டுக் கொள்ளவேண்டாம்.

நயன்தாரா படமும், விஜய் சேதுபதி படமும் ஒரே நாளில் களத்தில் இறங்கப்போவதையே அப்படி சூசகமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘கவண்’. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். டி.ராஜேந்தர், மடோனா செபஸ்டியான் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தை மார்ச்-31ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்தனர். இந்நிலையில், திடீரென்று இப்படம் ரிலீசாகும் அதே தேதியில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரா’ படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிடப்போவதாகவும் தெரிகிறது.

எனவே, ஒரே தேதியில் விஜய் சேதுபதி-நயன்தாரா நடிக்கும் படங்கள் மோதும் நிலை உருவாகியிருக்கிறது.

Leave a Reply