தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது விக்ரம் அதை அவர் பல முறை நிரூபித்துள்ளார். அதை இந்த முறையும் சாமி 2 பட வசூல் மூலம் நிரூபித்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது மூன்று நாட்களில் இப்படி ஒரு சாதனையா என்று எல்லோரையும் வியக்கவைத்துள்ளார்.
விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் சாமி-2 கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது.
ஆனால், ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை தான் இப்படம் பெற்றது. அப்படியிருந்து முதல் மூன்று நாள் சாமி-2 ரூ 33 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.
இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 17 கோடிக்கு மேல் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
துபாயில் ரூ 3 கோடி, மலேசியாவில் ரூ 3 கோடி என ரூ 8 கோடி வரை வெளிநாடுகளில் வசூல் செய்துள்ளதாம்.
படத்தின் விமர்சனத்திற்கு இந்த வசூல் எவ்வளவோ பரவாயில்லை என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களே தெரிவிக்கின்றது