
விவேகம் மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு படம் என்பது நாம் அறிந்த விஷயம் இதை திரையரங்க உரிமையாளர்கள் தவறான பாதையில் பயன்படுத்துகிறார்கள் பொதுவாக பெரிய படங்கள் வெளியாகும் பொது டிக்கெட் விலை சற்று உயரும் அதாவது விலையை ஏற்றி விற்பார்கள் இது தெரிந்த விஷயம் நாம் பழகிய விஷயம்.
குறிப்பாக ரஜினியின் கபாலி படத்தில் தான் முதலில் பகல் கொள்ளை ஆரம்பம் ஆனது அதாவது சென்னையில் உள்ள தனியார் கம்பனிகளில் மிரட்டி டிக்கெட் வாங்க வைத்தனர் அது அன்றைய அரசாக ஆட்சி புரிந்த சசிகலா ஆட்கள் காரணம் அந்த படத்தின் உரிமையை அவர்கள் வாங்கினார்கள் அதனால் அப்படி நடந்தது ஆனால் இன்றும் அது நடக்குது அஜித்தின் விவேகம் படத்துக்கு

அஜித்தின் விவேகம் படம் நாளை முதல் திரைக்கு வந்து ரசிகர்ளை பிரம்மிப்பில் ஆழ்த்த உள்ளது, பல தியேட்டர்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டன.
ஒரு சில தியேட்டர்கள் அடாவடி தனங்களில் ஈடுபட்டுள்ளன, ஒரு டிக்கெட்டின் விலை 500, 1000 என விற்றாலும் ரசிகர்கள் சற்றும் தயங்காமல் வாங்கி வருகின்றனர்.
ஆனால் டிக்கெட் என்ற பெயரில் துண்டு சீட்டுகளை எல்லாம் கொடுத்து ஒப்பேற்றுகின்றனர், இதனால் கொதித்தெழுந்த ரசிகர்கள் இதனை தட்டி கேட்டதால் அங்கு வாக்கு வாதமும் அடிதடியும் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் தான் தாம்பரம் அருகே உள்ள தியேட்டர் ஒன்றில் உங்கள் மொபைல் நம்பர் சொல்லுங்க, ஒரு மெசேஜ் வரும் அத காட்டினாள் தான் உள்ளே விடுவோம் என கூறியுள்ளனர், இதனை ரசிகர்கள் தட்டி கேட்டதால் தியேட்டர் ஊழியர்கள் ரசிகர்களை தாக்க வந்துள்ளனர்.
