
தமிழில் எப்போதும் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு போட்டி இருக்கும் இந்த போட்டியில் அஜித் விஜய் இந்த இருவருக்கும் எப்போதும் ஒரு போட்டி இருந்து கொண்டே இருக்கும் இந்த போட்டி என்பது அஜித் மற்றும் விஜய்க்கும் இல்லை இந்த இரு ரசிகர்களுக்கு தான் யார் சூப்பர் ஸ்டார் என்று இப்ப இந்த போட்டி பெண்களுக்கும் வந்துள்ளது ஆம் த்ரிஷா மற்றும் நாயன்தாராக்கு தான் இப்ப போட்டி
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இன்னும் தங்களுக்கென தனி இடத்தை வைத்திருக்கும் நடிகைகள் இருவர் தான். ஒருவர் த்ரிஷா மற்றொருவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கில் த்ரிஷா டாப்பில் இருந்த அளவிற்கு நயன்தாரா இருந்தது இல்லை. இருப்பினும் தற்போது நயன்தாரா என்றாலே தமிழ், தெலுங்கில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது.
த்ரிஷாவுக்கு முன்பாகவே நயன்தாரா அவருக்கென ஒரு தனிப் பெயரை உருவாக்கிவிட்டார். நல்ல கதாபாத்திரங்களில் யார் அதிகம் நடித்தது என்று பார்த்தால் அது நயன்தாராவாகத்தான் இருக்கும். தனி நாயகியாகவும் நயன்தாரா அவருடைய இமேஜை உயர்த்திவிட்டார். “நீ எங்கே என் அன்பே, மாயா, டோரா, அறம்” என வெற்றியைத் தாண்டி அந்தப் படங்களில் அவருடைய நடிப்பு பேசப்பட்டது.
த்ரிஷா தனி நாயகியாக நடித்து தமிழ், தெலுங்கில் 2016ம் ஆண்டு வெளிவந்த ‘நாயகி’ படம் வந்த அடையாளம் தெரியாமல் தோல்வியடைந்தது. தற்போது த்ரிஷா தனி நாயகியாக நடித்துள்ள ‘மோகினி’ படம் அடுத்த வாரம் 27ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படம் வெற்றியடைந்தால் த்ரிஷா தனி நாயகியாக நடித்துள்ள மற்றொரு படமான ‘கர்ஜனை’ படத்திற்கும் வரவேற்பு கிடைக்கும். மேலும், இந்த ஆண்டிலேயே த்ரிஷா நடித்துள்ள ‘1818, சதுரங்க வேட்டை 2, 96’ ஆகிய படங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.
அதே சமயம் நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், விஸ்வாசம்” ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வர உள்ளன. அதனால், இந்த ஆண்டு நயன்தாரா, த்ரிஷா இருவருக்கிடையில் தான் போட்டி இருக்கும்.
