
தமிழக முதல்வரைச் சந்தித்த ‘வித் லவ்’ படத் தயாரிப்பாளர்கள்
திரையரங்குகளில் அரங்கம் நிரம்பிய காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.
Zion Films நிறுவனத்தின் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியீட்டுத் தினம் முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் தயாரிப்பாளர்கள் முதல்வரைச் சந்தித்தனர்.
சந்திப்பின் போது, முதல்வர் படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படக்குழுவினரின் முயற்சியையும் பாராட்டினார். இந்த நிகழ்வு ‘வித் லவ்’ படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள ‘வித் லவ்’ திரைப்படம், 2026 பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், ரசிகர்களுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தனது கதை சொல்லும் திறமையால் கவனம் பெற்றுள்ளார்.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K. சுரேஷ் குமார் எடிட்டிங் செய்துள்ளார். ராஜ்கமல் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். ப்ரியா ரவி உடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

‘With Love’ Producers Meet the Hon’ble Chief Minister of Tamil Nadu
The producers of ‘With Love’, which is currently running successfully in theatres with houseful shows, met the Hon’ble Chief Minister of Tamil Nadu, M. K. Stalin, today as a courtesy call and received his greetings and blessings.
Presented by Zion Films, in association with MRP Entertainment, and produced by Basilian Nazareth and Mahesh Raj Basilian, the film has been receiving an overwhelming response from audiences since its release. The producers met the Chief Minister to share the joy of the film’s success.
During the meeting, the Hon’ble Chief Minister congratulated the team on the film’s success and appreciated their efforts. The interaction has further encouraged and motivated the team of ‘With Love’.
Directed by Madan (who previously worked as an associate director in ‘Lover’ and ‘Tourist Family’), the film stars Abishan Jeevind and Anaswara Rajan. ‘With Love’ was released worldwide on February 6, 2026, and continues its successful theatrical run. Centered around the lives, emotions, and love of today’s youth, the film has garnered appreciation not only from audiences but also from critics.
The film features music by Sean Roldan, cinematography by Shreyas Krishna, editing by K. Suresh Kumar, art direction by Rajkamal, and costume design by Priya Ravi.
