Monday, May 20
Shadow

ரைட்டர் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில், நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ரைடர் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் காவல்துறை சம்பந்தப்பட்ட பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக 2021 ஆம் ஆண்டு காவல்துறையை அதிகாரம், அதிகாரத்திற்குள் இருக்கும் ஆண்டு பிரச்சனைகளை மையமாக வைத்து தமிழ் சினிமா மிக அற்புதமாக படங்களை தந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் படம் தான் ரைடர். இந்திய சினிமாவின் ஒரு நோட்வர்த்தி படமாகத்தான் ரைடர் படம் பார்க்கப்படுகிறது. ஜாதி, மத ரீதியான பிரச்சனை, அடித்தட்டு மக்களின் போராட்டம், விளிம்பு நிலையில் வாழும் மக்களின் பிரச்சனைகள், ஏக்கங்கள் போன்ற பல காட்சிகளை பா ரஞ்சித் தன்னுடைய படங்களில் காண்பித்திருக்கிறார்.

இருந்தாலும் கூட சமூகத்திற்கு சொல்ல வேண்டிய முக்கியமான கருத்துக்களையும் பொறுப்புகளையும் சிறப்பாக ரைடர் படத்தில் சொல்லியிருக்கிறார். ரைடர் தங்கராஜ் என்ற கதாபத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். படத்தில் என்ற காலமாக ஒரு காவல் நிலையத்தில் ரைடர் ஆக பணிபுரிந்து கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. இவருக்கு இரண்டு மனைவிகள். அதில் இருக்கும் குடும்ப சிக்கல்கள் என்று அவருடைய வாழ்க்கை நகர்கிறது. பின் அவர் ரிட்டயர்மென்ட் ஆகும் நேரம் வருகிறது. இருந்தாலும் அதை சமாளித்து தன் கடைகளையும் நேர்த்தியாக சமுத்திரக்கனி செய்து வருகிறார்.

படத்தில் சமுத்திரக்கனி அவர்கள் 58 வயது சீனியர் அதிகாரியாக தொந்தியும் தொப்பையுமாக படம் முழுவதும் கலக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. ஒரு ரைடர் வாழ்வில் ஏற்படும் இன்னல்களை மையமாக ரைடர் கதை நகர்கிறது. ரைடர் படத்தின் முதல் பாதியில் சமுத்திரகனியும் தனது இரண்டு மனைவிகள் குடும்ப வாழ்க்கை என்று காட்சிகள் பொறுமையாக நகர்கிறது. மேலும், முதற்பாதியில் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் புதிராக படம் செல்கிறது. பின் இரண்டாம் பாதியில் பல புதிர்களுக்கு விடை அளிக்கும் வகையில் இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

அதோடு முதல் பாதி கொஞ்சம் சலிப்படைய செய்திருந்தாலும் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பாக சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தில் அண்ணன் –தம்பி ஏற்படுத்தி அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் வலியும் வேதனையும் என்று சொல்லப்படும் காட்சிகள் எல்லாம் நம்மை உறைய வைக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள் தியேட்டரிலேயே பலபேர் கண்களில் கண்ணீர் சிந்தவைத்து இருக்கிறது.

அந்த அளவிற்கு உணர்வுபூர்வமாக காட்சிகளை இயக்கி இருக்கிறார் இயக்குனர். படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் நடிகை இனியா அற்புதமாக நடித்திருக்கிறார். இவர் படத்தில் குதிரை ஓட்டுவது, நடித்திருக்கிறார். அடக்க முயற்சி செய்வது என அருமையாக அமைந்திருக்கிறது. படத்தில் கேமரா ஒர்க், இசை, எடிட்டிங் அனைத்தும் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. கோவிந்தாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகளின் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது என்பதை ஆழமாகச சிந்திக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு சங்கம் கண்டிப்பாக வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார் இயக்குனர்.

படத்தின் பிளஸ்:
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். சமுத்திரகனியின் நடிப்பு வேற லெவல்.

படத்திற்கு இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

ரைட்டர் திரைப்படம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்