Sunday, May 19
Shadow

யாரோ திரை விமர்சனம் 3/5

நாயகன் ஜான், ஒரு தனியார் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். சென்னையில் கடலோரத்தில் ஒரு மிகபெரும் பங்களாவில் தனியாக வசித்து வருகிறார்.

இவர் வசிக்கும் அந்த பங்களாவில் யாரோ ஒருவர் தன்னுடன் இருப்பதாக உணர்கிறார் ஜான். அதன் காரணமாக, தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பார்க்கும்படி சொல்கிறார். அவர்கள் பார்க்கும்போது அங்கு வேறு யாரும் இல்லை எனக் கூறி சென்று விடுகின்றனர்.

ஒருநாள், தனது வீட்டிற்குள் இருந்து கேமரா ஒன்றை எடுக்கிறார். அந்த வீடியோ கேமராவில், யாரோ ஒருவர் ஒரு பெரியவரை கொலை செய்யும் வீடியோ ஒன்று அதில் இருக்கிறது. இதைக் கண்டதும் ஜான் அதிர்ச்சி அடைகிறார். கொலை செய்யும் நபரின் முகம் அதில் தெரியாமல் இருக்கிறது.

இறுதியாக, அந்த வீடியோவில் கொலை செய்த நபர் யார்.? கொலை செய்யப்பட்ட நபர் யார் .?? ஜானை சுற்றி வரும் அந்த மர்ம நபர் யார்.? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கும் விதமாக இரண்டாம் பாதியை கொடுத்திருக்கிறார் இயக்குனர்..

நாயகன், வெங்கட் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம். ஒட்டுமொத்த கதையிலும் இவர் மட்டுமே பயணிக்கும் படியாக கதை நகர்கிறது. தயாரிப்பாளரும் இவராகவே இருப்பதால், நான் மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டக்யிட்டாரோ என்னவோ தெரியவில்லை. பெரிதான ஒரு மெனக்கெடல் படத்தில் எந்த காட்சியிலும் கொடுக்கவில்லை. ஓவர் பெர்பார்மன்ஸை கொடுத்து பல இடங்களில் காட்சிகளை சிதைத்திருக்கிறார் நாயகன் வெங்கட்.

படத்தின் முதல் பாதி எதற்காக இருக்கிறது என்றே தெரியவில்லை. தேவையே இல்லாமல் பல காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்தது. சரி, முதல் பாதியில் இருக்கும் பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் பதில் அளிப்பார்கள் என்று பார்த்தால், இரண்டாம் பாதியிலும் கேள்வி வேட்டை தொடர்ந்து கொண்டே செல்கிறது.

இறுதியாக யார் அந்த கொலையாளி என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைத்தது இதுவே, இப்படத்தின் பெரிய ஆறுதல்.

ஒரு சைக்கோ கொலைகாரன், தனியாக பங்களாவில் இருக்கும் முதியவர்களை கொன்று அந்த பங்களாவை தன்னுடையதாக ஆக்கிக் கொள்கிறான். இதுதான் கதை.

இதை பல வழிகளில், பல கோணங்களில் சொல்ல முயற்சித்து தோல்வியைதான் தழுவியிருக்கிறார் இயக்குனர் சந்தீப் சாய்.

KB பிரபுவின் ஒளிப்பதிவு சற்று ஆறுதல். அனில் கிரிஷின் இசை பெரிதாக ஜொலிக்கவில்லை.

யாரோ – திரைபடம் ஒருமுறை பார்க்கலாம் என்ற ரகமே.