Tuesday, April 28
Shadow

யாழ் – திரைவிமர்சனம் (சிறப்பான படம் )

இலங்கை தமிழர்கள் என்றாலே பாவம் அவர்களுக்கு அந்த நாட்டில் மட்டும் பிரச்சனை இல்லை நம் நாட்டிலும் தான் அவர்களை படம் எடுத்தல் கூட நம் நாட்டில் பிரச்னை தான் ஆம் இலங்கை தமிழர்களை பற்றிய படம் எடுத்தால் பல பிரச்சனைகளை அந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் சந்திக்கணும் அவர்களுக்கு ஏன் இந்த பிறவி என்று சொல்லும் அளவுக்கு தான் பிரச்சனைகள் வரும் இலங்கை தமிழ்கள் பற்றிய சரியான ஒரு ஆவன படம் கூட வருவதில் சிக்கல் அப்படியான பல சிக்கலை சந்தித்து வெளியாகி இருக்கும் இக சிறந்த படம் எந்த வித அரசியல் நோக்குகள் இல்லாமல் எந்த ஒரு தலைவனை குறிப்பிடாமல் வந்துள்ள படம் தான் யாழ் அப்படி இருந்தும் இந்த சிறந்த படம் பல இடைஞ்சல்கள் பின் தான் வெளியாகியுள்ளது.

யாழ் படத்தின் இயக்குனரை முதலில் இருகரம் கூப்பி வணங்கிவிட்டு இந்த படத்தை பற்றி பார்ப்போம்.

யாழ் என்பது ஒரு இசைக்கருவி என்பது நாம் அறிந்த விஷயம் இந்த யாழ் இசைக்கருவி எப்படி வந்தது இதன் வரலாறு என்ன என்று இக சிறப்பாக சொல்லை இருக்கும் படம் அதோடு யாழுடன் யாழ்பானத்தில் நடந்த மிக கொடுமைகளை அதாவது இலங்கையில் நடந்த யுத்தத்தில் முக்கிய பங்கு வகித்த கண்ணிவெடியை பற்றிய படம் தான் யாழ்

மூன்று கதையை ஒரே நேரத்தில் சொல்லி அதுக்கு ஒரே முடிவை மிக நேர்த்தியாக சொல்லி இருக்கும் படம் தான் யாழ்.

இந்த படத்தில் வினோத் கிஷன், டேனியல் பாலாஜி, சசிகுமார் சுப்பிரமணி, மிஷா கோஷல், நீலிமா ராணி, நீலிமா பாபு, மற்றும் பேபி ரக்சனா மற்றும் பலர் நடிப்பில் எஸ்.என். அருணகிரி இசையில் எ.கருப்பையா மற்றும் நசீர் ஒளிப்பதிவில் எம்.எஸ். ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் யாழ்

இரண்டு காதல் ஜோடி இரண்டு தாய் மற்றும் தன் குழந்தைகள் இலங்கை யுத்தத்தில் மாட்டி கொள்கிறார்கள் இந்த நான்கு பேரின் கதையை ஒரே நேரத்தில் சொல்லும் இயக்குனரை பாராட்டியே ஆகணும் இந்த நான்கு கதைக்கும் ஒரே முடிவு இந்த யுத்தத்தில் இவர்களின் முடிவு என்ன என்பதை மிக நேர்த்தியாக சொல்லி இருக்கும் படம் தான் இந்த யாழ்

படத்தில் நடித்த அனைவரும் தன் பங்கை உணர்ந்து நடித்துள்ளனர் லதாபாதிரமாகவே மாறி மிகவும் எதார்த்த நடிப்பை வெளிபடுதியுள்ளனர் குறிப்பாக நீலிமாராணி மற்றும் பேபி ரக்சனா நடிப்பில் மிரட்டியுள்ளனர் என்று சொன்னால் மிகையாகது

இயக்குனர் ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்று சொன்னால் மிகையாகது நேர்த்தியான கதையை மிக தைரியமாக கூறியிருப்பது பாராட்டவேண்டும் குறிப்பாக கண்ணிவெடியில் எப்படி எல்லாம் பாதிக்கிறார்கள் அதன் விளைவுகள் என்ன என்பதை மிகவும் அழகாக சொல்லி இருக்கிறார் யுத்தம் என்றால் ரத்தம் உடல் சிதைவுகள் இப்படி எல்லாம் காண்பித்து பயபடுத்தமால் மிகவும் நேர்த்தியாக கூறியிருக்கிறார்

இயக்குனருக்கு மிகவும் பக்க பலமாக ஒளிப்பதிவாளர்கள் மற்றும் இசையமைப்பாளர் அருமையான காட்சியமைப்பு வறண்ட தேசத்திலும் ஒரு பசுமை அருமை இசையைப்பளர்கள் பின்னணி இசையு சரி டைட்டில் பாடல் அருமை சிவனின் பெருமையையும் அதோடு யாழ் இசை பெருமையையும் மிக சிறப்பாக கூறியுள்ளார்கள்

மொத்தத்தில் யாழ் செவிக்கும் மட்டும் இல்லை மனதையும் நெருடவைக்கிறது