Tuesday, April 28
Shadow

பைரவா தோல்வியை ஒத்துக்கொண்ட விஜய் ….

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து பெரும் தோல்வியடைந்த படம் என்றால் அது பைரவா படம் என்று தான் சொல்லணும் ஆனால் இந்த படம் வெற்றி என்று தயாரிப்பாளர் பக்கமும் அடுத்து விஜய் இந்த படத்தின் வெற்றிக்கு தான் ஜெயின் பரிசு கொடுத்தார் என்றும் விஜய் ரசிகர்களும் சில ஊடகங்கள் சொன்னார்கள் தற்போது திருப்பூர் விநியோஸ்தர் சுப்பிரமணியம் இந்த படம் தோல்வியை பற்றி பகிரங்கமாக கூறினார். இதன் விலைவாக இதுவரை மௌனம் காத்த விஜய் தன் மௌனத்தை கலைத்துள்ளார்.

பைரவா படம் பெரும் நஷ்டம் அடைந்திருப்பதாகவும் படம் வாங்கிய விநியோகஸ்தர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நீங்கள் படக்குழுவினருக்கு தங்கச்சங்கிலி பரிசளிப்பது நியாயமா என பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு விஜய் தரப்பில் தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ” பைரவா படத்துக்காக அயராது உழைத்த உழைப்பாளர்களுக்கு விஜய் தனது சார்பில் அன்பின் அடையாளமாக பரிசு வழங்கினார். இது படத்தின் வெற்றிக்காக அல்ல” என அதில் கூறப்பட்டுள்ளது. உடனே அப்போ பைரவா படம் தோல்வியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Reply