
யோகி பாபு நடிப்பில் அட்வென்சர் காமடி-டிராமாவாக உருவாக்கி இன்று திரைக்கு வந்துள்ள படம் ஜாம்பி. இந்த படத்தில் யோகிபாபு உடன் யாசிகா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
எம்பிபிஎஸ் படிக்கும் மாணவிகள் தங்கள் செமஸ்டர் விடுமுறைக்காக வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இதில், அவர்கள் சாப்பிடும் உணவில் ஜாம்பி வைரஸ் கலக்கப்படுவதால், ஏற்படும் விளைவுகளை முழுமையாக காமடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஜாம்பி-யை கையாள லோக்கல் ரவுடியான யோகிபாபுவை அழைக்கிறார்கள். இந்த படத்தில் கேமரா காட்சிகள் சிறப்பாக உள்ளது. இந்த படத்தில் ஜாம்பி-யாக பெண்களே இருப்பதால், அவர்களது மேக்கப் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. படத்தில் ஜாம்பி-யாக நடித்துள்ள ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இசையை பொறுத்தவரை, ஜாம்பி திரைபடம் என்பதால், அதற்கேற்ப இசையமைப்பட்டுள்ளது. இதில் ஹாலிவுட் படத்தில் பார்க்கப்பட்ட பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. பாடல்களில் வரிகளை கேட்பதை விட யாசிகா ஆண்த்தின் கவர்சியான ஆட்டத்தை பார்ப்பதையே ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள். படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளுடன் காமடியும் சிறப்பாக இருந்துள்ளது. படத்தில் ஜாம்பியாக மாறாமல் இருக்கும் யாசிகா எப்படி மற்றவர்களுக்கு தலைமை வகித்து யோகி பாபு உடன் சேர்ந்து எப்படி காப்பாற்றுகிறார்கள் படத்தின் மீதி கதை.
படத்தின் பிளஸ்: யோகிபாபு காமடி
படத்தின் மைனஸ்: அளவுக்கு அதிகமாக கவர்சிகரமான நடன காட்சிகள்
மொத்தத்தில் யோகிபாபு காமடிக்காக குடும்பத்துடன் அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.
