Friday, November 6
Shadow

சமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்களின் அன்பு! – ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான தருணம்!

சமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்களின் அன்பு! – ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான தருணம்!

குழந்தைகளுக்கான உடைகள், பொம்மைகள், ஓவியங்கள் என அன்புப் பரிசுகளை வழங்கி நெகிழ வைத்த போட்டியாளர்கள் – வாழ்க்கைப் பயணத்தைப் பாராட்டி நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சக போட்டியாளரின் அனுபவப் பகிர்வு!

சமையல் போட்டி என்பதைத் தாண்டி, அன்பு, நட்பு, பாசம் எனப் பல உணர்வுப்பூர்வமான தருணங்களைப் பகிர்ந்து வரும் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில், நடிகை சமந்தா ரூத் பிரபுவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் அழகான சம்பவம் அரங்கேறியுள்ளது.

சோனி விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் வரவிருக்கும் எபிசோடில், சாமந்தாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் போட்டியாளர்கள் ஒன்றிணைந்து சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர். சமந்தாவின் நிகழ்ச்சிப் பயணத்தில் இடம்பெற்ற மறக்க முடியாத தருணங்களைத் தொகுத்து, அவருக்காக பிரத்யேக காணொளி ஒன்றைத் தயாரித்து வழங்கியுள்ளனர். அதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட சாமந்தாவுக்கு, குழந்தைகளுக்கான உடைகள், பொம்மைகள், அழகிய ஓவியங்கள், சாக்லேட்டுகள் எனப் பல அன்புப் பரிசுகளையும் வழங்கி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

இந்த நிகழ்வில் போட்டியாளர் ஜனனி பகிர்ந்துகொண்ட அனுபவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. தனது சகோதரி வாழ்க்கையில் மிகவும் சவாலான காலகட்டத்தைச் சந்தித்தபோது, சமந்தாவின் வாழ்க்கைப் பயணம் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்ததாக ஜனனி தெரிவித்துள்ளார். சமந்தாவின் தன்னம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட அவரது சகோதரி, மன உறுதியுடன் மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது உடற்பயிற்சிப் பயிற்சியாளராகவும் யோகா பயிற்றுநராகவும் பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளார். ஒருவரின் வாழ்க்கைப் போராட்டமும் தன்னம்பிக்கையும் மற்றொருவரின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்த அனுபவம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

தொடர்ந்து, தனது இளமைக்கால நினைவுகளைப் போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொண்ட சமந்தா, பல்லாவரத்தில் கழித்த தனது சிறுவயது நாட்களை நினைவுகூர்ந்துள்ளார். வீட்டின் அருகே அமைந்திருந்த மலையுடன் தொடர்புடைய பல சுவாரசியமான நினைவுகளைப் பகிர்ந்த அவர், படிப்பில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியான தருணங்கள் முதல் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளால் மனம் தளர்ந்த நாட்கள் வரை, தனது வாழ்வின் பல்வேறு உணர்வுகளுக்கும் அந்த இடம் சாட்சியாக இருந்ததை நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளார்.

திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சி தன்னை ஒரு நடிகையாக அல்லாமல், இயல்பான சமந்தாவாக வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். சக போட்டியாளர்களுடன் நெருங்கிப் பழகவும், அவர்களின் கனவுகள், ஆசைகள், வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ளவும் இந்த நிகழ்ச்சி வழிவகுத்ததாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், தனது கர்ப்ப கால அனுபவங்களையும் சமந்தா சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். கர்ப்பத்தின் முதல் ஏழு மாதங்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்ததாகவும், அதன் பிறகு சிறுவயதில் மிகவும் விரும்பி சாப்பிட்ட உணவுகளை ரசித்து உண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆர்.ஜே. விஜய், பிறப்பதற்கு முன்பே குழந்தை பல்வேறு உணவுகளின் சுவையை அறிந்துகொண்டுவிட்டதாக நகைச்சுவையாகக் கூற, அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு, போட்டியாளர்களுடன் உருவான அன்பும் நட்பும்தான் என்று சமந்தா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தன் மீது அவர்கள் காட்டிய அன்புக்கும், அளித்த மறக்க முடியாத பரிசுகளுக்கும் நன்றி தெரிவித்த அவர், நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகும் இந்த நட்பும் பாசமும் தொடர்ந்து நீடிக்கும் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சமையல் திறமையை வெளிப்படுத்தும் போட்டியாக மட்டுமின்றி, மனித உறவுகளின் மேன்மையையும், அன்பின் வலிமையையும் உணர்த்தும் நிகழ்ச்சியாக ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ திகழ்ந்து வருகிறது. எண்டமோல் ஷைன் இந்தியா தயாரிப்பில் உருவாகும் இந்நிகழ்ச்சி, சமையல் களத்தில் பல்வேறு பிரபலங்களை ஒன்றிணைப்பதோடு, அவர்களுக்கிடையே உருவாகும் நட்பு, பாசம், உணர்வுப்பூர்வமான நினைவுகள் ஆகியவற்றையும் அழகாகப் பதிவு செய்து வருகிறது.

‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு சோனி விழா (Sony VIZHA) தொலைக்காட்சியில் கண்டு ரசிக்கலாம். மேலும், சோனி லிவ் (Sony LIV) ஓடிடி தளத்திலும் இந்நிகழ்ச்சியைக் காணலாம்.

Contestants’ Heartwarming Gesture Brings Samantha Ruth Prabhu to Tears on ‘Celebrity MasterChef Tamil’!

From clothes and toys for children to heartfelt paintings and thoughtful gifts, contestants surprise Samantha with their love and affection. A fellow contestant’s emotional account of how Samantha’s life journey inspired her sister makes the moment even more special.

Going beyond the boundaries of a cooking competition, Celebrity MasterChef Tamil has been bringing audiences several heartwarming moments filled with love, friendship and emotional connections. In one such touching incident, actress Samantha Ruth Prabhu was moved to tears by a beautiful gesture from her fellow contestants.

In the upcoming episode of the show, airing on Sony VIZHA, the contestants come together to organise a special surprise for Samantha. They put together an exclusive video featuring some of the most memorable moments from her journey on the show. Deeply touched after watching the video, Samantha is further surprised when the contestants present her with several thoughtful gifts, including clothes for children, toys, beautiful paintings and chocolates.

During the occasion, contestant Janani shares a personal experience that leaves everyone emotional. She reveals that when her sister was going through one of the most challenging phases of her life, Samantha’s journey became a great source of hope and inspiration for her. Inspired by Samantha’s confidence and resilience, Janani’s sister found the courage to rebuild her life. Today, she works as a fitness trainer and yoga instructor. Her story stands as a powerful example of how one person’s struggles, determination and self-belief can inspire positive change in another person’s life.

Samantha also takes the opportunity to share some cherished memories from her younger days with the contestants. Recalling her childhood in Pallavaram, she talks about the many interesting memories associated with a hill located near her home. From the joy of achieving academic success to the difficult days when personal losses left her emotionally overwhelmed, she shares how the place has remained a witness to several important chapters of her life.

Although she has portrayed numerous characters on screen, Samantha says that Celebrity MasterChef Tamil has given her an opportunity to express herself as the person she truly is, rather than simply being seen as an actress. She adds that the show has allowed her to bond closely with her fellow contestants and understand their dreams, aspirations and personal journeys.

Samantha also shares some interesting anecdotes about her pregnancy. She reveals that she followed dietary restrictions during the first seven months of her pregnancy, but later indulged in several of her favourite childhood foods. Hearing this, show host RJ Vijay humorously remarks that the baby had already experienced the flavours of various foods even before birth, leaving the entire set filled with laughter.

Expressing her gratitude, Samantha says that the greatest gift she has received through the show is the love and friendship she has developed with the contestants. Thanking them for their affection and the unforgettable gifts, she also expresses her hope that the bonds they have built will continue long after the show comes to an end.

More than just a platform to showcase culinary skills, Celebrity MasterChef Tamil continues to celebrate the beauty of human relationships and the power of love and friendship. Produced by Endemol Shine India, the show brings together popular personalities from different walks of life in the kitchen while capturing the meaningful friendships, emotional connections and unforgettable memories they create along the way.

Celebrity MasterChef Tamil airs Monday to Friday at 8 PM on Sony VIZHA. Viewers can also catch the show on the Sony LIV OTT platform.